ஓசூரில் உள்ள எம்.எஸ். தோனி குலோபல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொண்டு பங்கேற்றார். அங்குள்ள பள்ளி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியை திறந்து வைத்தார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இணைந்து, பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டின் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நிகழ்வும் தொடங்கப்பட்டது. 






 


மேலும், இந்த நிகழ்ச்சியில் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் பங்கேற்றார்.


இந்த நிகழ்வின்போது சுமார் 1,800 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தோனி தொடங்கி வைத்தார். ஆயிரம் ஆசிரியர்களை கொண்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை இலக்காக கொண்டுள்ள மைக்ரோ சாப்ட்டுடன் பெங்களுரூவில் உள்ள எம்.எஸ் தோனி குளோபல் பயிற்சி நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


ஓசூரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேபட்ன் எம் எஸ் தோனி குளோபல் பள்ளியில் முதல் கிரிக்கெட் மைதானம், டிஜிட்டல் விழிப்புணர்வு திட்டத்தினை எம் எஸ் தோனி தொடங்கி வைத்தார்.


முழுவிவரம்: 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சென்னத்தூர் கிராமத்தில் MS.தோனி குளோபல் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கென 4 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச அளவிற்கான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்த
 முதல் கிரிக்கெட் மைதானத்தை இன்று திறந்து வைத்தார்.


மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமியுடன் பள்ளி தனது அதிகாரப்பூர்வ இணைக்கப்பட்டது. இந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி நேரத்திற்கு பிறகு கிரிக்கெட்டினை தொழில் முறை பயிற்சியாக அளிக்கும் நோக்கத்துடன், பள்ளி சூப்பர் கிங்ஸ் அகாடமியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 
மேலும் இந்த வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தையும், டிஜிட்டல் முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவும், அறிவுள்ளவர்களாக மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும், டிஜிட்டல் மைக்ரோசாப்ட் இன் உலகளவியல் பயிற்சி கூட்டாளியாக Tech - Avant - Garde  உடன் இணைந்து செயல்படவுள்ளது.


இந்த டிஜிட்டல் கல்வி விதிமுறை குறித்து ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப் போவதாகவும் அவர்கள் அரசு தனியார் பள்ளிகள் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் பயிற்சிக்கு பிறகு ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மைக்ரோசாப்ட் சான்றிதழ்கள்  வழங்கப்படும். இந்த நிகழ்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாகி அதிகாரி விஸ்வநாதன் பங்கேற்று இருந்தார். மேலும் தோனி பங்கேற்பதை காண பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் தோனி மைதானத்திற்கு வருகை தந்தார். இதனால் தோனியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.