சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜாவை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 7வது இடத்தில் ஜடேஜா செய்யக்கூடியதை வேறு எந்த வீரராலும் செய்ய முடியாது என்றும், சேப்பாக்கத்தில் நடக்கும் சொந்த போட்டிகளில் அவரது பங்களிப்பு மிக முக்கியம் என்றும் தோனி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 






10 ஆண்டு கொண்டாட்டம்..


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா இணைந்து 10 ஆண்டு கொண்டாட்டத்திற்காக, அணி நிர்வாகம் சிறப்பு போஸ்ட் பதிவிட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் போஸ்ட் செய்யப்பட்ட ட்வீட்டில் ஜடேஜா இன்னும் பத்தாண்டுகளுக்கு தொடரும்  ("10 more to go," ) என்று கமெண்ட் செய்திருந்தார். அதன்பிறகு ஜடேஜா அதை நீக்கியுள்ளார். இதை கவனித்த ரசிகர்களும் நெட்டிசன்களும், ஜடேஜாவின் செயலை குறிப்பிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா தொடர மாட்டாரா என்றெல்லாம் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பக்கத்தில் இருந்து சென்னை அணி தொடர்பான பதிவுகள் அனைத்தையும் நீக்கியிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த 2022 ஐ.பி.எல். போட்டியில், ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி தக்கவைத்துக்கொண்டது. 2022 ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கேப்டனாக ஜடேஜாவை சென்னை அணி நிர்வாகம் நியமித்தது.
முன்பு கேப்டனாக ஜடேஜாவை சென்னை அணி நிர்வாகம் நியமித்தது. தோனியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும்  அணியின் நலனை கருத்தில் கொண்டு ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர். 


 

ஆனால் நினைத்தது ஒன்று ..நடந்தது ஒன்று என்ற கதையாக ஜடேஜா தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் தொடரில் சொதப்பியது. ஜடேஜா டாஸ் போட மட்டும் தான் கேப்டனாக இருக்கிறார். அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தோனி தான் எல்லா முடிவையும் எடுக்கிறார் என்ற பல விமர்சனங்கள் எழத் தொடங்கிய நிலையில் ஜடேஜா பேட்டிங்கில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால் தோனியிடம் கேப்டன் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதன்பின் காயத்தால் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஜடேஜா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவார் என்ற தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கிறிஸ் ஜோர்டான் மற்றும் ஆடம் மில்னே பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது என்றும், இருவரும் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்க படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.