ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை நேற்று வெளியிட்டன. இச்சூழலில் 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் அதிக சம்பளத்துக்கு தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை இங்கே பார்ப்போம்.


ஐபிஎல் 2025:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியை தக்கவைத்தது. விராட் கோலியை பெங்களூரு அணி தக்கவைக்கும் பட்சத்தில் அவருக்கு கோடிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல அவருக்கு இந்த முறை 21 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது. கடந்த முறை அவரது அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அவருக்கு 18 கோடி சம்பளம் அளித்து இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த சம்பளத்திலேயே விராட் கோலி நீடித்து வந்தார்.


தற்போது அவருக்கு 21 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அவரை விட வேறு ஒரு வீரருக்கு அதிக சம்பளம் அளிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசனுக்கு 23 கோடி சம்பளம் அளிக்கப்பட்டு இருக்கிறது.  இதுவே 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒரு வீரரை தக்க வைக்க அளிக்கப்பட்ட அதிக சம்பளம் ஆகும். 



2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் அதிக சம்பளத்துக்கு தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:


ஹென்ரிச் கிளாசன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 23 கோடி ரூபாய்


விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 21 கோடி ரூபாய்


நிக்கோலஸ் பூரன் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 21 கோடி ரூபாய்


ருதுராஜ் கெய்க்வாட் - சென்னை சூப்பர் கிங்ஸ் - 18 கோடி ரூபாய்


ரவீந்திர ஜடேஜா - சென்னை சூப்பர் கிங்ஸ் - 18 கோடி ரூபாய்


ஜஸ்பிரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ் - 18 கோடி ரூபாய்


சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 18 கோடி ரூபாய்


யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 18 கோடி ரூபாய்


பாட் கம்மின்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 18 கோடி ரூபாய்


ரஷீத் கான் - குஜராத் டைட்டன்ஸ் -18 கோடி ரூபாய்


அக்சர் பட்டேல் - டெல்லி கேப்பிட்டல்ஸ் - 16.5 கோடி ரூபாய்


சுப்மன் கில் - குஜராத் டைட்டன்ஸ் - 16.5 கோடி ரூபாய்


ஹர்திக் பாண்டியா - மும்பை இந்தியன்ஸ் - 16.35 கோடி ரூபாய்


சூர்யகுமார் யாதவ் - மும்பை இந்தியன்ஸ் - 16.35 கோடி ரூபாய்


ரோஹித் ஷர்மா - மும்பை இந்தியன்ஸ் - 16.30 கோடி ரூபாய்