IPL 2024 Retention: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரைட் டு மேட்ச் கார்ட் வாய்ப்பை எந்த அணியால் அதிகம் பயன்படுத்த முடியும் என்ற தகவல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025: வீரர்கள் தக்கவைப்பு
ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்பாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு தங்களது அணிக்கான வீரர்களை தக்கவைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்படி, ரிஷப் பண்ட் , கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று கேப்டன்கள் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியோ சூர்யகுமார் யாதவ் , ஜஸ்பிரித் பும்ரா , ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய நான்கு சூப்பர் ஸ்டார்களையும் தக்கவைத்துள்ளது . பஞ்சாப் கிங்ஸ் 2 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டது. இப்படி 10 அணிகளின் முடிவில் அவர்கள் கைவசம் உள்ள மீதத்தொகை மற்றும் ஆர்டிஎம் வாய்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அணிகளிடம் உள்ள மீதத்தொகை & ஆர்டிஎம் வாய்ப்புகள்:
மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ. 16.35 கோடி), ரோகித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை:ரூ. 55 கோடி ரூபாய் (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: ஹென்ரிச் கிளாசென் (ரூ. 23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி (ரூ. 6 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 45 கோடி ரூபாய் (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ. 11 கோடி) மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மொஹ்சின் கான் (ரூ. 4 கோடி), ஆயுஷ் படோனி (ரூ. 4 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 69 கோடி ரூபாய் (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 110.5 கோடி ரூபாய் ( 120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 4
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), ரியான் பராக் (ரூ. 14 கோடி), துருவ் jurel (ரூ. 14 கோடி), ஷிம்ரோன் ஹெட்மெயர் (ரூ. 11 கோடி), சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 41 கோடி ரூபாய் (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): எதுவுமில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 18 கோடி), மதீஷா பத்திரனா (ரூ. 13 கோடி), சிவம் துபே (ரூ. 12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ. 18 கோடி), MS தோனி (ரூ. 4 கோடி)
மீதமுள்ள தொகை: ரூ.65 கோடி (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி)
மீதமுள்ள பர்ஸ்: ரூ. 83 கோடி (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 3
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரின்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), சுனில் நரைன் (ரூ. 12 கோடி), ஆண்ட்ரே ரசல் (ரூ. 12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ. 4 கோடி), ராமந்தீப் சிங் (ரூ. 4 கோடி) )
மீதமுள்ள தொகை: ரூ.51 கோடி ரூபாய் (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): எதுவுமில்லை
டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல் (ரூ. 16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி), அபிஷேக் போரல் (ரூ. 4 கோடி)
மீதமுள்ள தொகை: ரூ. 73 கோடி (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 2
குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான் (ரூ. 18 கோடி), சுப்மான் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் திவேதியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி)
மீதமுள்ள தொகை: ரூ. 69 கோடி (120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1