ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியிடம் கண்ட ஹாட்ரிக் தோல்விக்கு பழிதீர்க்கும் நோக்கில், மும்பை அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
மும்பை - கொல்கத்தா மோதல்:
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான புள்ளி விவரங்களை அறியலாம்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடங்கிய கடந்த 2008ம் ஆண்டு முதலே மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை 31 முறை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 22 போட்டிகளில் விளையாடி மும்பை அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கொல்கத்தா அணி வெறும் 9 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஹாட்ரிக் தோல்வி:
மொத்த ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசி 5 போட்டிகளில் கொல்கத்தா அணி தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக கடைசியாக இவ்விரு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் கொல்கத்தா அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
கடைசி ஐந்து போட்டி முடிவுகள்:
கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஸ்கோர் விவரங்கள்:
கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 210/6
மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 232/2
கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 108/10
மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 67/10
சிறந்த பேட்ஸ்மேன், பவுலர்:
மும்பை வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - ரோகித் சர்மா, 109* ( கொல்கத்தா மைதானம்)
கொல்கத்தா வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - மணீஷ் பாண்டே, 81* ( மும்பை மைதானம்)
மும்பை வீரரின் சிறந்த பந்துவீச்சு - பும்ரா, 5/10
கொல்கத்தா வீரரின் சிறந்த பந்துவீச்சு - ரஸ்ஸல், 5/15 (சென்னை மைதானம்)
அதிகபட்ச ரன்கள்:
கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த மும்பை வீரர் - ரோகித் சர்மா (904 ரன்கள்)
மும்பை அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த கொல்கத்தா வீரர் - சூர்யகுமார் யாதவ் (480 ரன்கள்)
அதிக விக்கெட்டுகள்:
கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த மும்பை வீரர் - பும்ரா (20 விக்கெட்டுகள்)
மும்பை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த கொல்கத்தா வீரர் - சுனில் நரைன் (23 விக்கெட்டுகள்)