ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் சீசன்:
16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 21 லீக் போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
நேற்றைய போட்டி:
சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி வார்னர் தலைமையிலான டெல்லி அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்றொரு லீக் போட்டியில் வலுவான லக்னோ அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.
புள்ளிப்பட்டியல்:
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
ராஜஸ்தான் | 4 | 3 | 1 | 6 |
லக்னோ | 5 | 3 | 2 | 6 |
குஜராத் | 4 | 3 | 1 | 6 |
பஞ்சாப் | 5 | 3 | 2 | 6 |
கொல்கத்தா | 4 | 2 | 2 | 4 |
சென்னை | 4 | 2 | 2 | 4 |
பெங்களூரு | 4 | 2 | 2 | 4 |
ஐதராபாத் | 4 | 2 | 2 | 4 |
மும்பை | 3 | 1 | 2 | 2 |
டெல்லி | 5 | 0 | 5 | 0 |
முதல் நான்கு இடங்களில் யார்?
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், லக்னோ அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும், குஜராத் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளையும், பஞ்சாப் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 2 முதல் 4வது இடங்களை பிடித்துள்ளன. கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் அணி தலா 4 போட்டிகளிலும் விளையாடி தலா இரண்டில் வெற்றி பெற்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முறையே 5 முதல் 8வது இடங்களில் உள்ளன. மும்பை அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மற்றும் வெற்றியையும், டெல்லி அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையும் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முறையே கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
இன்றைய போட்டிகள்:
இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. மற்றொரு போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெற்றால் குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறும். ஒருவேளை ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும்.