தொடர் தோல்விகளுக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) நேற்று நடைபெற்ற போட்டியில், வென்று வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. இதோடு இந்த வார ஹோம் மேட்ச் தோல்வி ஜிங்க்ஸ்-ஐயும் முறியடித்துள்ளார்கள். தொடர்ந்து ஐந்து போட்டிகள் இந்த வாரத்தில் ஹோம் அணிக்கு தோல்வியாக அமைந்த நிலையில், அதை நீளவிடாமல் தடுத்தது ஆர்சிபி. 










கோலி அதிரடி ஃபார்ம்


ஆர்சிபி ஒரு வழியாக 23 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸை தோற்கடித்த நிலையில் அவர்களது ஹீரோவாக மீண்டும் ஒருமுறை முன்னாள் வந்து நின்றுள்ளார் விராட் கோலி. இந்த ஐபிஎல் தொடரில் பயங்கரமான ஃபார்மில் இருக்கும் கோலி 4 போட்டிகளில் 3 வது அரை சதம் அடித்து மிரட்டி வருகிறார். இந்த போட்டியில் அனைவரும் ஆட்டமிழந்து செல்ல கோலி மட்டும் தன்னந்தனியாக முதல் பத்து ஓவரிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். 










கூடுதல் குதூகலமான கோலி


இந்த அரை சதத்தை கோலி கொண்டாடிய விதம் கூட கொஞ்ச ஆக்ரோஷமாக இருந்ததை பலரும் கவனித்திருக்கக் கூடும். அதற்கு காரணமும் உண்டு, எதிரணியான டெல்லி அணியின் அணி இயக்குனர் சவுரவ் கங்குலி என்பதுதான். இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியபோது இருவருக்கும் இடையே பூசல் இருப்பது வெளிவந்தது. அவரது ஃபார்மை காரணம் காட்டி அவருக்கு எதிராக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அனைத்தையும் கடந்து இன்று மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வந்து நிற்பதை யார் பார்கிறார்களோ இல்லையோ, கங்குலி பார்ப்பது உண்மையிலேயே விராட்கோலிக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெருமையான, திமிரான மொமெண்ட்தான். அவை தான் கடந்த சில மணிநேரங்களாக சமூக வலைதளங்களில் எதிரொலித்து வருகின்றன.










கை கொடுக்காமல் சென்ற கங்குலி


இந்த அரை சதத்திற்குப் பின் கோலியின் உடல் மொழியும் மாறி இருந்தது. களத்தில் ஃபீலடிங் செய்தபோது மிகவும் உற்சாகத்துடனும், பெருமையுடனும் காணப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டுகளை விட்டு டெல்லி அணி தடுமாறிய நிலையில், கங்குலி டக்-அவுட் நிலையில் அமர்ந்திருக்கும்போது க்ராஸ் செய்த விராட் கோலி கங்குலியை பார்த்துக்கொண்டே சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த நேரத்தில் கங்குலி கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்திருப்பது பல கோடி கோலி ரசிகர்களுக்கு பூஸ்ட்டை தந்துள்ளது.


இதற்கெல்லாம் மேல் கடைசியாக போட்டியை வென்ற ஆர்சிபி அணி வெளியேறும்போது, டெல்லி அணி கை குலுக்கிக் கொண்டே வர, ரிக்கி பாண்டிங்கின் பின்னால் கங்குலி வந்தார். விராட் கோலியை பார்த்த ரிக்கி பாண்டிங் இரண்டு வார்த்தை கூடுதலாய பேச, இடையில் கிடைத்த 2 நொடியை பயன்படுத்தி கோலிக்கு கை கொடுக்காமல் ஸ்கிப் செய்து அடுத்த வீரரிடம் சென்றார் கங்குலி. இந்த விடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.