இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின்  ஆறாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 



  பெங்களூரு அணியின் உள்ளூர் மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை பெங்களூரு அணி 82 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 42 வெற்றிகளையும் 40 தோல்விகளையும் அந்த அணி பெற்றுள்ளது. அதேசமயம் மும்பை அணி இந்த மைதானத்தில் 13 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூரு - மும்பை அணிகள் இதுவரை 30 முறை மோதியுள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறது. இதில் 17 முறை மும்பையும், 13 முறை பெங்களூரு அணியும் வென்றுள்ளது.    


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின்பிளேயிங் லெவன்:


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ண் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இம்பேக்ட் வீரர்கள்


அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், மஹிபால் லோம்ரோர், சோனு யாதவ், டேவிட் வில்லி


மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:


ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான்


மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் வீரர்கள்


 ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, சந்தீப் வாரியர், ராமன்தீப் சிங்