ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.


இந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பாக விளையாடினர். அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் அவுட்டாக, நிதிஷ் ரானா களமிறங்கினார். அவரும் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ராவின் வேகத்தில் சிக்கி அவுட்டானார். அவரை அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தனர். 


சிறப்பாக பந்துவீசிய பும்ரா, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். 13.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.குமார் கார்த்திகேயா 2 விக்கெட்டுகளும், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 20 ஓவர் வரை தாக்குப்பிடித்த கொல்கத்தா அணி முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருக்கிறது.









இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தசைப்பிடிப்பு காரணமாக ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சூர்யகுமார் யாதவ் இடது முன் கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், இந்த சீசனில் சூர்யகுமார் விளையாட மாட்டார் எனவும், பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் ஆலோசனையில் அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தது. இது மும்பை அணி மீதம் இருக்கும் போட்டிகளில் ஆறுதல் வெற்றிப்பெற சிக்கலாக அமையலாம். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண