மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் அசகாய சூரர்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆடி வருகிறது.


இந்த போட்டியில் முதல் ஓவர் முதல் சென்னை அணி அற்புதமாக பந்துவீசி வருகின்றனர். அந்த அணியின் தொடக்க பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இஷான் கிஷானும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். இருவரும் டக் அவுட்டாகினர்.




சென்னை அணியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தாலும், பீல்டிங் மிகவும் சொதப்பலாக அமைந்தது. இரண்டாவது ஓவரை சென்னை அணிக்காக சான்ட்னர் வீசினார். அந்த ஓவரில் ப்ரெவிஸ் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை சென்னை கேப்டன் ஜடேஜா தவறவிட்டார். ஆனாலும், அடுத்த ஓவரில் டேவல்ட் ப்ரெவிஸ் முகேஷ் சவுத்ரி பந்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அதேபோல, சான்டனர் பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு சூர்யகுமார் யாதவ் இறங்கிவந்து பந்தை தவறவிட்டார். அப்போது கிடைத்த எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை தோனி தவறவிட்டார். கீப்பிங் கிங் தோனி தவறவிட்ட அந்த பொன்னான வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் அற்புதமாக பயன்படுத்தி வருகிறார்.




அதேபோல, முகேஷ் சவுத்ரி வீசிய 3வது ஓவரில் திலக் வர்மா பேட்டில் பட்டு சிலிப்பில் கிடைத்த அருமையான கேட்ச்சை ப்ராவோ தவறவிட்டார். இன்றைய போட்டியில் சென்னை அணி சிறப்பாக பந்துவீசினாலும், சொதப்பலாக பீல்டிங் செய்து வருகிறது. குறிப்பாக, கைக்கே வரும் பந்துகளையும், கேட்ச்களையும் கோட்டை விட்டு வருவது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களில் சான்ட்னர் பந்தில் அவுட்டானார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண