தோனியின் கடைசி போட்டியா?


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இதில் நேற்று (மே12) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 61 வது லீக் போட்டி நடைபெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.


இதனிடையே நேற்றைய போட்டி தான் தோனி விளையாடும் கடைசி போட்டி என்று கூறப்பட்டது. அதாவது தோனி ஏற்கனவே தன்னுடைய கடைசி போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறும் என்று கூறியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டில் ஒரு வேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தால் ஹோம் கிரவுண்டில் இந்த சீசனில் விளையாடும் கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்றும் பேசினர் 


கனவுல கூட அவரு தான்:


இந்நிலையில்தான் தல தோனி குறித்து சேப்பாக்கம் மைதானத்தின் ஊழியர் ஒருவர் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்யும் அவர் உணர்ச்சி பொங்க பேசியதாவது, “கடந்த 10 வருடங்களாக நான் ஐபிஎல் போட்டியில் இங்கே வேலை பார்க்கிறேன்.






நான் தோனிக்காகத்தான் இந்த ஐபிஎல்லில் வேலைக்கு வருகிறேன். தோனியை நாங்க மிஸ் பண்ணுவோம். தோனிக்கு இது தான் கடைசி ஐபிஎல் மேட்ச்னு சொல்றாங்க. அது உண்மையா இல்லையானு தெரியல. எத்தனை சூப்பர் கிங் கேப்டன்கள் வந்தாலும் எங்கள் தோனி மாதிரி வருவதற்கு வாய்ப்பே கிடையாது. நா தூக்கத்துல இருந்த கூட அவருதான் என் கனவுல வந்துட்டே இருப்பாரு. ” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.


அதேபோல் மற்றொரு தோனி ரசிகர், “நான் தோனிய பார்ப்பதற்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். நான் அவர அவ்வளவு நேசிக்கிறேன். ” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு நெட்டிசன்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றன. மேலும் தோனி நிச்சயம் ஒய்வை அறிவிக்க மாட்டார் கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெல்லும். அப்போது தான் தோனி ஓய்வு பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர் ரசிகர்கள்.


மேலும் படிக்க: "சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!


மேலும் படிக்க: CSK vs RR Innings Highlights: எடுபடாத ராஜஸ்தான் பேட்டிங்; சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 142 ரன்கள் இலக்கு!