ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்று தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்து முடிந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


இதையடுத்து, தோற்ற குஜராத் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்புள்ளது.  அகமதாபாத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள 2வது இரண்டாவது தகுதிச்சுற்று  போட்டியில் குஜராத் அணியுடனான  மோத உள்ள அணி யார் என்பதை உறுதி செய்யும், எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் லீக் போட்டிகளில்  3 மற்றும் 4வது இடங்களை பிடித்த லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 


பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள்


மும்பை அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்


லக்னோ அணி:  ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா(கேப்டன்), கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.