பாப் டூ பிளிசி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ அணி, ப்ளே ஆப் வரை சென்று அசத்தியது. அப்போது, எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணியிடம் வீழ்ந்தே லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த சீசனில், பெங்களூரு அணி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் வலம் வருகின்றது. லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.
இந்தநிலையில், இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணியே வெற்றி பெற்றது. கடந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி 19 ஏப்ரல் 2022 அன்று மும்பை டாக்டர் DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி லக்னோ அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய லக்னோ தொடக்க விக்கெட்களை இழந்தாலும், க்ருனால் பாண்டியா (42), மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் (24) ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தின் உதவியுடன் 163 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் மீண்டும் சூப்பர் ஜெயன்ட் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்த ரஜத் படிதாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
RCB vs LSG புள்ளிவிவரங்கள்:
- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அதிக ரன்கள்: ரஜத் படிதார் -112
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அதிக ரன்கள் : கேஎல் ராகுல் -109
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக அதிக விக்கெட்டுகள்: ஜோஷ் ஹேசில்வுட்-7
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள்: க்ருனால் பாண்டியா -2
கடந்த 2 போட்டிகளில் வெற்றி விவரங்கள்:
தேதி | வெற்றி | வித்தியாச வெற்றி | இடம் |
25 மே 2022 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 14 ரன்கள் | ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா |
19 ஏப்ரல் 2022 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 18 ரன்கள் | டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியம், மும்பை |
கணிக்கப்பட்ட அணி விவரங்கள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி):
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், மைக்கேல் பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG):
கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, மார்க் வூட், யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னாய்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முழு அணி:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அஹமத், ரஜத் படிதார், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மஹிபால் லோம்ரோர், ஃபின், சுயாஷ் பிரபுட்ஸ், சுயாஷ் பிரபுட்ஸ் சர்மா, சித்தார்த் கவுல், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, மனோஜ் பந்தேஜ், ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ், மைக்கேல் பிரேஸ்வெல்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முழு அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னாய், நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனத்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக்.