ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த விராட் கோலி முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அனுஜ் ராவத் அளித்த கேட்சை லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சிறப்பாக பிடித்தார். அவர் கேட்ச் பிடித்தது தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் கே.எல்.ராகுலின் கேட்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே லக்னோ அணி 2 விக்கெட் எடுத்து அசத்தியது. அதன்பின்னர் மேக்ஸ்வேல் 23 ரன்களிலும், பிரபுதேசாய் 10 ரன்களும் ஆட்டமிழந்தனர். இதன்காரணமாக முதல் 10 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது.
சற்று முன்பு வரை பெங்களூரு அணி 15 ஓவர்களின் முடிவில் 130 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்