நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பு அடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த முறை புதிதாக வந்த இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அவற்றுடன் ஏற்கெனவே இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இம்முறை சிறப்பான ஃபினிசராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் திகழ்ந்து வருகிறார். 


 


இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டம் தொடர்பாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “என்னை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். அவர் இந்திய அணியில் விளையாடுவதற்கு தற்போது அவருடைய வயதை பார்க்க தேவையில்லை. களத்தில் அவருடைய ஆட்டத்தை தான் பார்க்க வேண்டும். 


 


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஒரு நல்ல ஃபினிசராக இருப்பார். 6 அல்லது 7 இடத்தில் களமிறங்கும் வீரரிடம் அணி என்ன எதிர்பார்க்குமோ அதை தற்போது கார்த்திக் செய்கிறார். ஆகவே அவர் அணியில் நிச்சயம் இடம்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


 






 நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். மற்ற 5 முறையும் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 


 


நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் எடுத்த ரன்கள்:


32*(14)vs பஞ்சாப்


14*(7) vs கொல்கத்தா


44*(23)vs ராஜஸ்தான்


7*(2)vs மும்பை


34(14)vs சென்னை


66*(34)vs டெல்லி


 


இவ்வாறு தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு நல்ல ஃபினிசராக தினேஷ் கார்த்திக் இருந்து வருகிறார். அவருடைய ஆட்டத்தை பார்த்து ஆர்சிபி ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஏபிடிவில்லியர்ஸ் இல்லாத குறையை இவர் சற்று சரி செய்து வருகிறார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண