RCB vs LSG: புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 ஆகுமா லக்னோ..? மிரட்டல் வெற்றி பெறுமா ஆர்.சி.பி..! ஐ.பி.எல். வரலாறு சொல்வது என்ன?

ஐ.பி.எல். தொடரில் இன்று லக்னோவில் நடக்கும போட்டியில் எல்.எஸ்.ஜி. அணியை வீழ்த்தி பெங்களூர் அணி பழிதீர்க்குமா? என்று ஆர்.சி.பி. ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Continues below advertisement

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் உள்ள வாஜ்பாயி மைதானத்தில் நடக்கும் போட்டியில் பெங்களூர் அணி லக்னோ அணிக்கு எதிராக களமிறங்குகிறது. இந்த தொடரில் பெங்களூர் அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 4  வெற்றிகள் பெற்று 4 தோல்வி அடைந்துள்ளது. அதில், லக்னோ அணிக்கு எதிரான தோல்வி பெங்களூர் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

Continues below advertisement

இதுவரை நேருக்கு நேர்:

இதன்காரணமாக, இன்றைய போட்டியில் லக்னோ அணியை  வீழ்த்தி பெங்களூர் ரசிகர்களுக்கு ஆர்.சி.பி. அணி மகிழ்ச்சியை தரவே விரும்பும் என்று எதிர்பார்க்கலாம்.

  • கடந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான லக்னோ அணியும். ஆர்.சி.பி. அணியும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
  • இதில் லக்னோ அணி 1 முறையும், ஆர்.சி.பி. அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பாண்டில் நடைபெற்ற ஒரு போட்டியிலும் லக்னோ அணி வெற்றி பெற்றது.
  • இரு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தனிநபர் அதிகபட்சமாக ரஜத் படிதார் 112 ரன்கள் விளாசியதே அதிகமாகும்.
  • லக்னோ அணிக்காக கே.எல்.ராகுல் 79 ரன்கள் குவித்தது எல்.எஸ்.ஜி. சார்பில் தனிநபர் அதிகபட்சம் ஆகும்.
  • இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டுப்ளிசிஸ் மொத்தமாக 175 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

புள்ளிப்பட்டியல் நிலவரம்:

புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணியை காட்டிலும் லக்னோ அணி வலுவான நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்.சி.பி. அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும். அதேசமயம் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். ஆர்.சி.பி. அணியை காட்டிலும் லக்னோ அணி ரன்ரேட்டை வலுவாக வைத்துள்ளது.

நடப்பு தொடரில் ரன்ரேட் மிகவும் வலுவாக உள்ள அணிகளாக ராஜஸ்தான் அணி மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. லக்னோ அணிதான் தற்போது ரன்ரேட் அதிகளவில் வைத்துள்ளது. லக்னோ அணிக்கு தற்போது வரை 0.841 ரன்ரேட் உள்ளது. ஆனால், ஆர்.சி.பி. அணியின் ரன்ரேட் மைனசில் உள்ளது. -0.139 மட்டுமே பெங்களூரிடம் உள்ளது.

டாப் 4 இடங்கள்:

இனி வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றியை பெற்றால் மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெயருக்கு ஏற்ப ராயலாக புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைய முடியும். இரு அணிகளும் கடைசியாக மோதிய போட்டியில் கோலி, டுப்ளிசிஸ், மேக்ஸ்வெல் அதிரடியில் பெங்களூர் அணி 212 ரன்கள் குவித்த நிலையில், 213 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி பூரண், ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Watch Video: போட்டிக்கு நடுவே போர்க்களமான மைதானம்... ஹைதராபாத் - டெல்லி அணிக்கு இடையே பார்வையாளர்களால் பரபரப்பு..!

மேலும் படிக்க: Watch Video: ஸ்லோ பந்தில் விக்கெட்டை விட்ட ரோஹித்... அவுட்டா? நாட் அவுட்டா? ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை!

Continues below advertisement