ஐபிஎல் 2023 சீசனின் 40 வது போட்டியில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 63 ரன்கள், பில் சால்ட் 59 ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை சந்தித்தது. ஹைதராபாத் அணி சார்பில் மயங்க் மார்கண்டே இரண்டு விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக பந்துவீசினார்.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா (67), ஹென்ரிச் கிளாசென் (53*) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் டெல்லி அணி சேஷிங் செய்தபோது பார்வையாளர்கள் அமரும் இடத்தில் இரு அணி ரசிகர்களும் சண்டையிட்டு கொண்டனர்.
ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத் போட்டியின்போது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ, இரு அணியின் ரசிகர்கள் அடித்து கொள்வதாக வீடியோ வெளியானது. கால்பந்து மைதானத்தின்போது இரு நாட்டு ரசிகர்கள் அடித்து கொள்ளும் வீடியோவை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு கிரிக்கெட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளின் புள்ளி விவரங்கள்:
மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேபோல், டெல்லி அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இதற்கு முன், இரு அணிகளும் மோதிய 34வது போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. டெல்லி அணி சார்பில் அக்சர் படேல் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் மணீஷ் பாண்டே (34), அக்சர் படேல் (34) ரன்கள் எடுத்திருந்தனர். ஹைதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.