ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் இந்த தொடரின் 21வது போட்டியில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
காயம் காரணமாக போட்டியை மிஸ் செய்த ஷிகர்தவான்:
காயம் காரணமாக ஷிகர்தவான் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சாம்கரண் கேப்டனாக களமிறங்கியுள்ளார். ஐபிஎல் தொடரை தொடர்ந்து இரண்டு வெற்றிகளுடன் தொடங்கிய பஞ்சாப் அணி, மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடனும் நான்காவது போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது.
இதையடுத்து, லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற்று மூன்றாவது வெற்றியை குவிக்க பஞ்சாப் அணி முனைப்பு காட்டி வருகிறது.
அதேபோல, நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை குவித்துள்ள லக்னோ, பெங்களூர் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
லக்னோ அணி விவரம்: கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குருணால் பாண்டியா, நிக்கோலஸ் பூரான், ஆயுஷ் படோனி, அவேஷ் கான், யுத்வீர் சிங், மார்க் வூட், ரவி பிஸ்னோய்.
பஞ்சாப் அணி விவரம்: அத்தர்வா தைதே, மேட் ஷார்ட், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சிக்கந்தர் ராசா, சாம் கரன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங்.
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 1 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஒரு முறை வெற்றிபெற்றுள்ளது.
மொத்தப் போட்டிகள் | 1 |
பஞ்சாப் வெற்றி | 0 |
லக்னோ வெற்றி | 1 |
முடிவு இல்லை | 0 |
பஞ்சாப் தோல்வி | 1 |
லக்னோ தோல்வி | 0 |
பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 133 |
லக்னோ அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 153 |
பஞ்சாப் அணியின் குறைந்த ஸ்கோர் | 133 |
லக்னோ அணியின் குறைந்த ஸ்கோர் | 153 |
சிறந்த வீரர்கள்:
புள்ளிவிவரங்கள் | சிறந்த வீரர்கள் | செயல்திறன் |
அதிக ரன்கள் | குயின்டன் டி காக் (லக்னோ) | 46 ரன்கள் |
அதிக விக்கெட்டுகள் | ககிசோ ரபாடா (பஞ்சாப்) | 4 விக்கெட்டுகள் |
அதிக மதிப்பெண் | குயின்டன் டி காக் (லக்னோ | 46 ரன்கள் |
சிறந்த பந்துவீச்சு படம் | ககிசோ ரபாடா (பஞ்சாப்) | 4/38 |
வரும் ஏப்ரல் 28ஆம் தேதி, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்த போட்டி மொஹாலியில் இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.