DC vs RCB 1st Innings Highlights: பேட்டிங் பிட்சில் பெங்களூரை 174 ரன்களுக்குள் சுருட்டிய டெல்லி; வெற்றி இலக்கை எட்டுமா?

DC vs RCB: முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி டெல்லி அணிக்கு 175 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

Continues below advertisement

DC vs RCB: முதல் போட்டியில் மும்பையை வென்ற பிறகு தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த பெங்களூரு அணியும், நான்கு போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றியைக் கூட பெறாத டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமான பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச முடிவு செய்தார். 

Continues below advertisement

அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய பெங்களூரு அணி முதல் இரண்டு ஓவர்களில் பவுண்டரிகளை விளாசி மைதானம் முழுவதும் டெல்லி அணி வீரர்களை ஓடச் செய்தனர். சிறப்பாக விளையாடி வந்த பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தனது விக்கெட்டை மிட்ஷெல் மார்ஷ் பந்து வீச்சில் இழந்தார். இதன் பின்னர் விராட் கோலியுடன் லோம்ரோர் களமிறங்கினார். இருவரில் விராட் கோலி அடித்து ஆட லோம்ரோர் நிதானமாக ஆடினார். பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 47 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் டெல்லி அணியின் சுழல் பந்து வீச்சில் ரன் எடுக்க தடுமாறிய பெங்களூரு அணி ரன் சேகரிப்பில் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் அதிரடியில் இறங்கிய விராட் கோலி 33 பந்தில் அரைசதம் எட்டினார். ஆனால் அவரும் தனது விக்கெட்டை அடுத்த பந்தில் இழந்தார். அதன் பின்னர் வந்த மேக்ஸ் வெல் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட மைதானமே ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தது. 

இதற்கிடையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி அடுத்தடுத்து மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை குல்தீப் யாதவ் பந்து வீச்சில் இழந்து மேலும் தடுமாறியது. இந்த இரண்டு விக்கெட்டுகளும் 15வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் வீழ்த்தப்பட்டது. 14வது ஓவரின் கடைசிப் பந்தில் ஹர்சல் பட்டேல் விக்கெட் வீழ்த்தப்பட்டதால், இந்த மூன்று விக்கெட்டுகளும் ”டீம் ஹாட்ரிக்”  ஆக பதிவானது. 15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து தடுமாறி வந்தது. தினேஷ் கார்த்திக் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய இம்பேக்ட்ன் ப்ளேயர் அனுஜ் ரவாத் களமிறக்கப்பட்டார். ஷஹ்பாஷ் உடன் கைகோர்த்தார். ஆனால் இருவரும் 18 மற்றும் 19வது ஓவர்களில் தான் பவுண்டரிகளை விளாசினர். 

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி 50 ரன்களும், லோம்ரோர் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 24 ரன்களும் சேர்த்தனர். டெல்லி அணி சார்பில் மிட்ஷெல் மார்ஷ், குல்தீப் யாதவ், லலித் யாதவ் தல 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Continues below advertisement