IPL2023 DC vs RCB Playing XI:  டெல்லி அணியில் மிட்ஷெல் மார்ஷ் இணைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 


பெங்களூர் - டெல்லி:


ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் சேஸ் செய்த அணி பெரும்பாலும் போட்டியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம், பெங்களூரு அணியோ தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டது. இதனால், வெறும் இரண்டு புள்ளிகள் உடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதனால் டெல்லி அணி தனது வெற்றிக்கணக்கை தொடங்கவும், பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பவும் திட்டங்களை வகுத்து களமிறங்கியுள்ளன. 



இரு அணிகளில் மிகவும் கவலைக்கிடமாக உள்ள அணி என்றால் அது டெல்லி அணி தான். ஆனால் அந்த அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக மிட்ஷ்ல் மார்ஸ் அந்த அணியில் இணைந்துள்ளார். இது டெல்லி அணிக்கு சாதகமாக பார்க்கப் படுகிறது.  இரு அணிகளின் வீரர்கள் குறித்த விபரங்களைப் பார்க்கலாம். 


டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன்


டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்: 


பிருத்வி ஷா, முகேஷ் குமார், பிரவீன் துபே, சர்பராஸ் கான், சேத்தன் சகாரியா


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்


சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, ஆகாஷ் தீப், கர்ண் சர்மா, அனுஜ் ராவத்