LSG vs PBKS: கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தோள்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சாம் கரன் அணையை வழி நடத்தினார். பலமான லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்து வீச முடிவு செய்தார். புட்கள் நிறைந்த ஆடுகளத்தில் மிகவும் நிதானமாக ரன்கள் சேகரித்த லக்னோ அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் மேயர்ஸ் தனது விக்கெட்டை இழக்க, களத்து வந்த தீபல் ஹூடா 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் கேப்டன் கே.எல். ராகுலுடன் இருனல் பாண்டியா இணைந்து சிறிது நேரம் நிதான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் லாக்னோ அணி 100 ரன்களைக் கடந்தது, மேலும், தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் விளாசி விளையாடினார்.
ரபாடா வீசிய 15வது ஓவரில் க்ருனல் பாண்டியா மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆட்டமிழந்தனர். அதிரடியில் சிக்ஸர்களை விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட பூரான் டக் அவுட் ஆனார். அதன் பின்னர், களத்திற்கு வந்த ஸ்டாய்னஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவரும் 15 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் கேப்டன் சாம் கரன் மூன்று விக்கெட்டுகளும், ராபாடா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். லக்னோ அணி சார்பில் கேப்டன் கே.எல். ராகுல் 74 ரன்களும் மேயர்ஸ் 29 ரன்களும் சேர்த்து இருந்தனர். பஞ்சாப் அணி சார்பில் ஷாருக்கான் பவுண்டரி லைனில் மிகச் சிறப்பாக மூன்று கேட்சுகளை பிடித்து அசத்தினார்.