LSG vs KKR, IPL2022 Live: லக்னோ அணியின் அசத்தல் பந்துவீச்சில் 101 ரன்களுக்கு சுருண்ட கேகேஆர்...
LSG vs KKR, IPL2022 Live: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள் !
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படுத் தோல்வி அடைந்துள்ளது.
13 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணியின் வீரர் நிதிஷ் ரானா 2 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
கொல்கத்தா அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய தமிழக வீரர் பாபா இந்திரஜித் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னோ அணி 176 ரன்களை விளாசியது. இதனால், கொல்கத்தாவிற்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா வீரர் ஷிவம் மாவி வீசிய ஒரே ஓவரில் ஸ்டோய்னிஸ் 3 சிக்ஸர்கள், ஹோல்டர் 2 சிக்ஸர்கள் என 5 சிக்ஸர்கள் விளாசி 30 ரன்களை சேர்த்துள்ளனர்.
கொல்கத்தா வீரர் ஷிவம் மாவி வீசிய 19வது ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தொடர்ச்சியா 3 சிக்ஸர்கள் விளாசி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த பந்திலே அவுட்டாகினார்.
16 ஓவர்களின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிக் காக் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்துள்ளார்.
4 ஓவர்களின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் லக்னோ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 2 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் ரன் அவுட்டாகியுள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் 3 தோல்வியை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆகவே அந்த அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்யும் இடத்தில் உள்ளது. இதன்காரணமாக இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் முனைப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணி தற்போது வரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 6 தோல்விகளை பெற்றுள்ளது. இதன்காரணமாக 8 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 8ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று கடினம். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்ச்சிக்கும் என்று கருதப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -