ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ மற்றும் சென்னை அணி சார்பில் களமிறங்கும், பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


சென்னை - லக்னோ மோதல்:


ஐபிஎல் 16வது சீசனின் 46வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில், மழையால் தாமதமான போட்டி மாலை 3.45 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்ங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் லக்னோ அணி இன்று களமிறங்குகிறது. அதேநேரம் இந்த போட்டியில் கேப்டன் கே.எல். ராகுல் இல்லாதது அந்த அணிக்கு, பின்னடைவாக கருதப்படுகிறது. இதனிடையே, இரு அணிகளின் சார்பில் களமிறங்கும் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லக்னோ அணியின் கேப்டனாக க்ருணால் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG):
மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ்,  கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா(கேப்டன்), கிருஷ்ணப்ப கவுதம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய், கரண் சர்மா, நவீன்-உல்-ஹக், மோஷின் கான்


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


 யாஷ் தாக்கூர், டேனியல் சாம்ஸ், டி காக், மன்கட் தீபக் ஹூடா


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே):
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா, தீபக் சாஹர்


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


அம்பத்தி ராயுடு, மிட்செல் சாண்ட்னர், சேன்பாதி, ரஷீத், ஆகாஷ் சிங்


நேருக்கு நேர்: 


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி இதுவரை 2 முறை மட்டுமே மோதியுள்ளது. இதில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது. 



  • விளையாடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை: 2

  • எல்எஸ்ஜி வென்ற போட்டிகள்: 1

  • சிஎஸ்கே வென்ற போட்டிகள்: 1

  • எல்எஸ்ஜிக்காக அதிக ரன்கள்: 61 (குயின்டன் டி காக்)

  • சிஎஸ்கேக்காக அதிக ரன்கள்: 76 (சிவம் துபே)

  • எல்எஸ்ஜிக்காக அதிக விக்கெட்டுகள்: 5 (ரவி பிஷ்னோய்)

  • சிஎஸ்கே அதிக விக்கெட்டுகள்: 4 (மொயீன் அலி)

  • எல்எஸ்ஜிக்காக அதிக கேட்சுகள்: 2 (மார்க் வூட் & ரவி பிஷ்னோய்)

  • சிஎஸ்கேக்காக அதிக கேட்சுகள்: 2 (பென் ஸ்டோக்ஸ், எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா)