ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ள நிலையில், இப்போட்டியில் யார் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை காணலாம்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 16வது ஐபிஎல் தொடரில் இதுவரை 44 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவதாக மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45வது போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 46வது போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றது.
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் எட்டு போட்டிகளில் தலா நான்கு வெற்றி, தோல்விகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு?
பஞ்சாப் அணி: அதர்வா டைட், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், சிக்கந்தர் ராசா, சாம் கரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
மும்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், அர்ஷத் கான்
ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் (impact) வீரர்கள் யார்?
பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர், பிரப்சிம்ரன் சிங், ரிஷி தவான், பானுகா ராஜபக்சே, ககிசோ ரபாடாவும், மும்பை அணியில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், விஷ்ணு வினோத், குமார் கார்த்திகேயா, சூர்யகுமார் யாதவ், அர்ஷத் கானும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதானம் எப்படி?
இந்த சீசனில் பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அந்த அணி இரண்டு முறை 190 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 458 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே வரவிருக்கும் போட்டியிலும் அதிக ரன்கள் குவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங் செய்ய வாய்ப்புள்ளது.
பஞ்சாப் அணி இந்த சீசனில் இதுவரை தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடிய நான்கு போட்டிகளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் இதற்கு முன்பு 8 முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி உள்ளது. இரு அணிகளும் தலா 4 முறை வெற்றி பெற்றுள்ளது.இதனால் இன்றைய ஆட்டம் யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.