சென்னை சேப்பாக்கத்தில் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. சிறிது நேரத்திலேயே ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.


ஐபிஎல் போட்டியின் 16-வது சீசன் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 15 சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.


இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்கு மட்டும் 7 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வரும் மே 6-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது.  


ஆன்லைனில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்


இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கிரிக்கெட் வாரியம் அறிவித்தபடி இன்று தொடங்கியது. அதன் அடிப்படையில் நேரடியாக டிக்கெட் விற்பனை மற்றும் ஆன்லைன் புக்கிங் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆன்லைன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. 


நேரடி டிக்கெட் விற்பனை


நேரடி டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை  வாங்குவதற்காக மே 2-ஆம் தேதி இரவு முதலே ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை காத்திருந்தனர். நேற்று இரவு முதல் சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல், டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்தனர். ரசிகர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். 


பெண்களுக்கான டிக்கெட் விற்பனை கவுண்டர்கள் 11 மணியளவில் தொடங்குகிறது. டிக்கெட்டுகளை வாங்க குவிந்துள்ள ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை  கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான காவல்துறையினர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் . கூட்டாத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.


போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இது கடைசி மேட்ச் என்பதாலும் சேப்பாக்கத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியை நேரடியாக மைதானத்திற்கு சென்று காண அவரின் ஏரளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.  கடந்த 30-ஆம் தேதி சென்னை - குஜராத் அணிகள் மோதிய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் பஞ்சாப் அணி, சென்னையை வீழ்த்தியது. இந்நிலையில் வரும் 6-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை அணி வெல்லுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் போட்டியை கண்டு களிக்க ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.