லக்னோவில் நடைபெறும் ஐபிஎல் 2023ன் 46வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்திய நேரப்படி இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டி முதலில் மே 4ம் தேதி நாளை (வியாழன்) லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், லக்னோவில் நடைபெறவுள்ள மேயர் தேர்தல் காரணமாக போட்டி மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து, மே 4 ம் தேதிக்கு பதிலாக மே 3 ம் தேதி மாலை 4 மணிக்கு போட்டியை நடத்த ஐபிஎல் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
முந்தைய போட்டி சுருக்கம்:
இந்த சீசனில் சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி மோதிய முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 47 ரன்கள் எடுத்தார்.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ, 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. லக்னோ அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன்களை விளாசினார்.
நேருக்கு நேர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி இதுவரை 2 முறை மட்டுமே மோதியுள்ளது. இதில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது.
- விளையாடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை: 2
- எல்எஸ்ஜி வென்ற போட்டிகள்: 1
- சிஎஸ்கே வென்ற போட்டிகள்: 1
- எல்எஸ்ஜிக்காக அதிக ரன்கள்: 61 (குயின்டன் டி காக்)
- சிஎஸ்கேக்காக அதிக ரன்கள்: 76 (சிவம் துபே)
- எல்எஸ்ஜிக்காக அதிக விக்கெட்டுகள்: 5 (ரவி பிஷ்னோய்)
- சிஎஸ்கே அதிக விக்கெட்டுகள்: 4 (மொயீன் அலி)
- எல்எஸ்ஜிக்காக அதிக கேட்சுகள்: 2 (மார்க் வூட் & ரவி பிஷ்னோய்)
- சிஎஸ்கேக்காக அதிக கேட்சுகள்: 2 (பென் ஸ்டோக்ஸ், எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா)
முழு அணி விவரம்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கே.எல். ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், ஆயுஷ் படோனி, அவேஷ் கான், டேனியல் சாம்ஸ், குயின்டன் டி காக், பிரேரக் மன்கட், மனன் வோஹ்ரா, மார்க் வூட், ஜெய்தேவ் உனத்கட், ஸ்வப்னில் சிங், மொஹ்சின் கான், ரொமாரியோ ஷெப்பர்ட், அர்பித் குலேரியா, யுத்வீர் சிங் சரக், கரண் ஷர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ்:
எம்.எஸ். தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங், டுவைன் சுப்ரா ப்ரிடோரியஸ், , ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிசண்டா மாகலா, அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், பகத் வர்மா, நிஷாந்த் சிந்து