ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.


இதனால், பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டர்கள் நிதானமான ஆட்டத்தை தொடங்கினாலும் பவர்ப்ளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால், ரன் சேர்க்க திணறியது அந்த அணி.


தொடர்ந்து களமிறங்கிய பேட்டர்களும் பெரிதாக சோபிக்காததால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ரஸல் மட்டும் பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளித்து 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். இதனால், 20 ஓவர்களை முழுமையாக விளையாடாத கொல்கத்தா அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கும் பெங்களூரு அணிக்கு, 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.






எளிதான இலக்கை சேஸ் செய்த பெங்களூருவுக்கு ஆரம்பத்திலேயே சறுக்கல் இருந்தது. டாப் ஆர்டர் பேட்டர்கள் அனுஜ், டுப்ளிசி, விராட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால், எளிதாக சேஸ் செய்ய வேண்டிய இலக்கை தட்டுத்தடுமாறி சேஸ் செய்தது. கடைசி ஓவர் வரை நீடித்த இந்த சேஸிங்கில், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான தினேஷ் கார்த்திக் போட்டியை முடித்து வைத்தார். 






19.2 ஓவர்களில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு132 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது பெங்களூரு அணி. இதன் மூலம் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண