ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.


இந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பாக விளையாடினர். அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் அவுட்டாக, நிதிஷ் ரானா களமிறங்கினார். அவரும் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ராவின் வேகத்தில் சிக்கி அவுட்டானார். அவரை அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தனர். எனினும் 20 ஓவர் வரை தாக்குப்பிடித்த கொல்கத்தா அணி முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.


பந்துவீச்சில் மிரட்டிய மும்பை, இலக்கை எட்டி போட்டியை கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இஷான் கிஷன் தவிர மற்ற பேட்டர்கள் யாரும் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை, 20 ஓவர் வரை தாக்குப்பிடிக்கவில்லை. 17.3 ஓவர்களிலேயே, 113 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியது.






2022 ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பும்ராவின் ஆட்டம் வீணானது. 11 போட்டிகளில் விளையாடி இருக்கும் மும்பை அணி,இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது. 12 போட்டிகளில் விளையாடி இருக்கும் கொல்கத்தா அணி, 5 போட்டிகளில் வெற்றிப்பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. எனினும் ப்ளே ஆஃப் வாய்ப்பு சவாலானதாகவே இருக்கும் என தெரிகிறது.







பிற முக்கியச் செய்திகள்:


மேலும் படிக்க: Mahinda Rajapaksa Resigns: போராட்டத்திற்கு அடிபணிந்தார் ராஜபக்சே.... பிரதமர் பதவியில் இருந்து விலகல்... அடுத்தடுத்த நெருக்கடியில் இலங்கை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண