KKRvsSRH Live Score: ஹைதராபாத்தை வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்ட கேகேஆர்!
இந்த போட்டியில் தோல்வி அடையும் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு நிச்சயம் மங்கிவிடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள்.
20 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா அணி 177 ரன்கள் எடுத்திருக்கிறது.
முதல் விக்கெட்டை அடுத்து நிதிஷ் ரானா, ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோர் அவுட்டாகி வெளியேறியுள்ளனர். இதனால், 14 ஓவர்கள் முடிவில் 110/5
ரஹானே, நிதிஷ் ரானா களத்தில் இருக்க பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா 55/1
போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, ஜான்சனின் பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.
Background
ஐ.பி.எல். தொடரின் முக்கிய ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டி ஆகும்.
புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் உள்ளது. கொல்கத்தா அணி 12 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 7 தோல்விகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு நிச்சயம் மங்கிவிடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள். குறிப்பாக, பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற போராடுவார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -