KKR vs SRH: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஐபிஎல் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பல எதிர்பாராத திருப்பங்களும் அரங்கேறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் பிற்பாதி ஆட்டங்கள் தான் புள்ளிப்பட்டியலில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் விளையாடுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி முடிவு செய்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை
நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மிகவும் அனுபவ வீரர்களையும் துடிப்பு மிக்க இளம் வீரர்களையும் கொண்டுள்ள கொல்கத்தா அணிக்கு இந்த சீசனில் இதுவரை நல்லபடியாக அமையவில்லை. குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் பெற்ற வரலாற்று வெற்றியை பார்க்கும் போது இம்முறை கொல்கத்தா அணி மிகவும் சவாலான அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணிக்கு இந்த தொடர் மிகச்சிறப்பாக அமையவில்லை.
அதே சமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பெற்றுள்ளது. ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் என்னதான் பெரிய அளவிலான திட்டத்துடன் களமிறங்கினாலும், மைதானத்தில் அந்த அணியால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை கண்கூடப் பார்க்க முடிகிறது. மிகவும் திறமையான இளம் பட்டாளத்தினைக் கொண்டுள்ள இந்த அணியால் தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டம் என்பதால் ஆடுகளத்தில் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்
மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, டி நடராஜன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
ராகுல் திரிபாதி, விவ்ராந்த் சர்மா, க்ளென் பிலிப்ஸ், நிதிஷ் ரெட்டி, சன்வீர் சிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ப்ளேயிங் லெவன்:
ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், என் ஜெகதீசன், லாக்கி பெர்குசன், குல்வந்த் கெஜ்ரோலியா