ஐ.பி.எல். தொடரின் முக்கிய ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டி ஆகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஓப்பனிங் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், ரஹானே கூட்டணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே வெங்கடேஷ் அவுட்டாக, அடுத்து நிதிஷ் ரானா களமிறங்கினார்.
இந்நிலையில், பவுலுங் செய்த உம்ரான் மாலிக், டாப் ஆர்டர் பேட்டர்களை பெவிலியனுக்கு அனுப்பினார். நிதிஷ் ரானா, ரஹானே, ஸ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் மட்டும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
ரிங்கு சிங் 9 ரன்களுக்கு வெளியேற, ரஸல் அதிரடி காட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 49 ரன்கள் எடுத்தார். இதனால் மோசமான டார்கெட்டாக இல்லாமல், 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் குவித்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஹைதரபாத் அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், மார்க்கோ ஜென்சன், நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் உள்ளது. கொல்கத்தா அணி 12 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 7 தோல்விகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு நிச்சயம் மங்கிவிடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள். குறிப்பாக, பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற போராடுவார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்