கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட் செய்கிறது.  


இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் முன்னிலையில், மேட்ச் ரெஃபரி சக்தி முன்னிலையில் டாஸ் போடப்பட்டது. டாசை கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா சுண்டிவிட்டார்.


டாசில் குழப்பம்:


பெங்களூர் கேப்டன் ஃபாப் டுப்ளிசிஸ் ஹெட்ஸ்( தலை) என்று கேட்டார். டாசிலும் ஹெட்ஸ் விழுந்தது. ஆனால், போட்டி ரெஃப்ரி ஹெட்ஸ் விழுந்தது என்று கூறிவிட்டு கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவை அழைத்தார். ஆனால், அருகில் நின்ற டுப்ளிசிஸ் ஹெட்ஸ் என்று கேட்டது தான் என்று கூறினார். இதனால், ஒரு நிமிடம் நிதிஷ் ராணா குழப்பம் அடைந்தார்.






சற்று அதிருப்தியுடன் அவர் பின்னே சென்றார். அப்போது, டாஸ் போடுவதை தொகுத்து வழங்கிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நிதிஷ் ராணாவிடம் உங்களுக்கு சம்மதம்தானே? என்று கேட்டார். அதற்கு அவர் தலையசைத்தபடி பின்னால் சென்றார். டாஸ் போடும்போது திடீரென நடந்த இந்த சிறு குழப்பத்தால் சில நிமிடங்கள் ரசிகர்கள் மத்தியிலும், இரு கேப்டன்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.


ஷர்துல் அதிரடி:


பின்னர், டாஸ் வென்ற ஆர்.சி.பி. கேப்டன் டுப்ளிசிஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினாலும், தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும், மன்தீப்சிங் டக் அவுட்டாகியும், நிதிஷ் ராணா 1 ரன்னிலும் அவுட்டானார். ஆனாலும, தொடக்க வீரர் குர்பாஸ் அதிரடியாக ஆடி 57 ரன்களை குவித்தார். 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஷர்துல் தாக்கூர் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசி அசத்தினார்.


ஷர்துல் தாக்கூரின் இந்த அதிரடியான ஆட்டத்தால் தடுமாறிக் கொண்டிருந்த கொல்கத்தா அணி 150 ரன்களை 16வது ஓவரிலே கடந்தது.


மேலும் படிக்க: Kane Williamson: நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய அடி.. கிழிந்த முழங்கால் தசை.. உலகக்கோப்பை தொடரை இழக்கும் வில்லியம்சன்!


மேலும் படிக்க:  Prabhsimran Singh Profile: பஞ்சாப் அணிக்காக ஆரம்பம் முதலே அதிரடி.. பயமில்லா 22 வயது இளைஞன்.. யார் இந்த பிரப்சிம்ரன் சிங்.?