KKR vs CSK, IPL 2023 LIVE: 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

IPL 2023, Match 33, KKR vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 23 Apr 2023 11:43 PM
KKR vs CSK, IPL 2023 LIVE: 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 49ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

KKR vs CSK, IPL 2023 LIVE: 7வது விக்கெட்டும் காலி.. விழிபிதுங்கும் கொல்கத்தா..

கொல்கத்தா அணியின் 7வது விக்கெட்டும் வீழ்ந்தது. அந்த அணி 17.2 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்துள்ளது

KKR vs CSK, IPL 2023 LIVE: விக்கெட்டுகளை இழக்கும் கொல்கத்தா அணி - வெற்றி தருணத்தில் சென்னை

கொல்கத்தா அணி வீரர் ரஸல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை மதீஷா பதிரானா கைப்பற்றினார்.

KKR vs CSK, IPL 2023 LIVE: தீக்‌ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஜேசன் ராய் - 5வது விக்கெட்டை இழந்தது சென்னை அணி

கொல்கத்தா அணி வீரர் ஜேசன் ராய் 26 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த நிலையில் தீக்‌ஷனா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்

KKR vs CSK, IPL 2023 LIVE: 19 பந்துகளில் அரைசதம் அடித்த ஜேசன் ராய்.. வெற்றி பெறும் முனைப்பில் கொல்கத்தா

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில்  ஜேசன் ராய் அரைசதம் அடித்தார்

KKR vs CSK, IPL 2023 LIVE: 10 ஓவர்களில் 76 ரன்களை விளாசிய கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்களை விளாசியுள்ளது. 

KKR vs CSK, IPL 2023 LIVE: 4வது விக்கெட்டை இழந்தது கொல்கத்தா அணி - நம்பிக்கையிழக்கும் ரசிகர்கள்

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 4வது விக்கெட்டை இழந்தது - கேப்டன் நிதிஷ் ராணா 27 ரன்களில் ஆட்டமிழந்தார்

KKR vs CSK, IPL 2023 LIVE: 3 விக்கெட்டை இழந்தது கொல்கத்தா அணி ..

கொல்கத்தா அணி தனது 3வது விக்கெட்டை இழந்தது. வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 7.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு  46 ஆக உள்ளது

KKR vs CSK, IPL 2023 LIVE: மெதுவாக ஆடும் கொல்கத்தா.. திணற வைக்கும் சென்னை பந்துவீச்சு

பவர்பிளே முடிவில் கொல்கத்தா அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

KKR vs CSK, IPL 2023 LIVE: முதல் விக்கெட்டை இழந்தது கொல்கத்தா அணி .. ஸ்டம்புகள் சிதற வெளியேறிய நரேன்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி சுனில் நரேன் விக்கெட்டை இழந்தது - அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஆகாஷ் சிங் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

KKR vs CSK, IPL 2023 LIVE: சிவம் துபே அவுட்!

அரைசதம் அடித்த சிவம் துபே, ஜேசன் ராய் கேட்சில் அவுட் ஆனார்.

KKR vs CSK, IPL 2023 LIVE: சிவம் துபே அரைசதம்!

சிவம் துபே 20 பந்துகளுக்கு அரை சதம் அடித்தார். 

KKR vs CSK, IPL 2023 LIVE: ரஹானே அரைசதம்!

சி.எஸ்.கே.-யின் 34 பந்துகளுக்கு 51 ரன் எடுத்து அரை சதம் அடித்தார். 2 விக்கெட்கள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து சி.எஸ்.கே. விளையாடி வருகிறது,

KKR vs CSK, IPL 2023 LIVE: பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசும் சென்னை அணி 

சென்னை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 38 (20 பந்துகள்) ரன்களும், ஷிவம் துபே 40 (16 பந்துகளும்) எடுத்துள்ளனர்

KKR vs CSK, IPL 2023 LIVE:150 ரன்களை கடந்தது சென்னை அணி - விழிபிதுங்கும் கொல்கத்தா பவுலர்கள்

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 14.2 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது

KKR vs CSK, IPL 2023 LIVE: வாணவேடிக்கை காட்டும் சென்னை அணி - விழிபிதுங்கும் கொல்கத்தா

கொல்கத்தா பந்து வீச்சை விளாசி தள்ளும் சென்னை அணி - ஷிவம் துபே, ரஹானே இருவரும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினர். 

KKR vs CSK, IPL 2023 LIVE: ஆட்டமிழந்தார் டெவன் கான்வே.. சென்னை அணி   12 ஓவர்களுக்கு 109/2

கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி   12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு  109 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

KKR vs CSK, IPL 2023 LIVE: அரைசதம் அடித்த டெவன் கான்வே - 10 ஓவர்களில் 94 ரன்கள் குவித்த சென்னை அணி

சென்னை அணி வீரர்  டெவன் கான்வே அரைசதம் அடித்தார். அந்த அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்துள்ளது. 

KKR vs CSK, IPL 2023 LIVE: முதல் விக்கெட்டை இழந்தது சென்னை அணி - சுழலில் சிக்கிய ருத்துராஜ்

சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் சுயாஷ் ஷர்மா சுழலில் ஸ்டம்புகள் சிதற அவுட்டானார் 

KKR vs CSK, IPL 2023 LIVE: பவர்ப்ளேவில் ரன்களை குவித்த சென்னை அணி..

கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பவர் ப்ளேவில் (6 ஓவர்கள்) விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது. 

Background

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுகள் மற்றும் தனிநபர் சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்:


ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம். முன்னதாக இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் வரலாறு எப்படி உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 17 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவும் எதுவும் எட்டப்படவில்லை. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில், சென்னை அணி மூன்றிலும், கொல்கத்தா இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.


ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 9 போட்டிகளில், சென்னை அணி 5 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானங்களில் இதுவரை 80 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 33 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 47 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்தது.


ஸ்கோர் விவரங்கள்:


கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 220


சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 202


கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 55


சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 61


தனிநபர் சாதனைகள்:


கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த சென்னை வீரர்: சுரேஷ் ரெய்னா, 610 ரன்கள்


சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த கொல்கத்தா வீரர்: ஆண்ட்ரே ரஸல், 284 ரன்கள்


கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த சென்னை அணி வீரர்: ஜடேஜா, 16 விக்கெட்கள்


சென்னை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த கொல்கத்தா அணி வீரர்: நரைன், 20 விக்கெட்கள்


கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி வீரரின் அதிகபட்ச ஸ்கோர்:  டூப்ளெசிஸ், 95 ரன்கள்


சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி வீரரின் அதிகபட்ச ஸ்கோர்: பிஸ்லா, 92 ரன்கள்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.