ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் குறித்த விவரங்களை காணலாம். 


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில்  தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  


முன்னதாக சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்கள் 7வது போட்டியில் இன்று விளையாடும் நிலையில், இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என முழு முயற்சியுடன் களமிறங்கியுள்ளது. 


இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.  சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 17 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை. 


பிளேயிங் லெவன்


சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகீஷ் தீக்ஷனா


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): என் ஜெகதீசன், ஜேசன் ராய், நிதிஷ் ராணா(கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் சர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.