நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதிய போட்டி சனிக்கிழமை மதியம் லக்னோவில் நடந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பை பொறுப்பாக செய்து வரும் ஹர்திக் பாண்டியாவின், அண்ணன் க்ருனால் பாண்டியா எதிரணியான லக்னோவில் இடம்பிடித்துள்ளார். இருவரும் எதிரெதிராக மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது.
பாண்டியா vs பாண்டியா
அந்த போட்டி துவங்கும்போது, பாண்டியா சகோதரர்களில் யார் விளையாட்டில் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கேட்ட வாக்கெடுப்பின் ஸ்கிரீன் ஷாட் திரையில் பகிரப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு, கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்த நிலையில், அதில் குஜராத் டைட்டான்ஸ் அணியின் கேப்டனான இளைய சகோதரர் ஹர்திக்கை ரசிகர்கள் அதிகம் விரும்புவதாகக் காட்டியது. அதேபோல அவர் ஆட்டத்திலும் முக்கியமான கட்டத்தில் அரைசதம் அடித்தார். அதே நேரத்தில் க்ருனால் பந்தி வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். பார்வையாளர்களை மேலும் ஸ்வாரஸ்யப் படுத்துவதற்காக கேள்வியாக இருந்தாலும், அதே போட்டியில் ஹர்திக் செய்த ஒரு செயல் இருவருக்கும் இடையே சிறு போட்டி இருப்பதை காட்டியது.
ஸ்லெட்ஜிங் செய்த ஹர்திக்
ஏழாவது ஓவரில் ரஷித் கான் கைல் மேயர்ஸை 19 ரன்களில் 24 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த பிறகு, இடது கை ஆட்டக்காரரான க்ருனால் பாண்டியாவை 3-வது இடத்தில் இறக்க, லக்னோ முடிவு செய்தது. க்ருனால் உள்ளே நுழைந்தவுடன், ஹர்திக் அவரிடம் ஏதோ கூறினார். பதிலுக்கு ஏதாவது கூறுவார் என்று மைண்ட் கேம் ஆட முயற்சித்தார் ஹர்திக். ஆனால் க்ருனால் பாண்டியா கே.எல்.ராகுலுடன் பேசிவிட்டு ஹர்திகை பார்த்து சிரித்தார். மேலும் கிரீஸை நோக்கிச் செல்வதற்கு முன்பு ஹெல்மெட் மற்றும் கையுறைகளை சரிசெய்தபடியே அவரை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தரே தவிர எதிர்வினையாக எதுவும் பேசாமல் கடந்து சென்றார்.
என்ன கூறினார் ஹர்திக்
குஜராத் அணி ஆடிய முதல் இன்னிங்ஸிற்குப் பிறகு ஹர்திக்குடனான உரையாடல் பற்றி கேட்டபோது, "நாங்கள் ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக்கொண்டிருந்தோம். ஆட்டத்திற்கு முன் அவர், நான் உன் பந்துவீச்சில் அடிப்பேன் என்று என்னிடம் கூறினார். கடைசி முறை அவர் என் பந்தை எதிர்கொண்டபோது, நான் அவரை வீழ்த்தி இருந்தேன், அதனால் தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்றேன்," என்று க்ருனால் கூறினார்.
லக்னோ - குஜராத் போட்டி
எகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 136 ரன்களைத் துரத்திய லக்னோ அணிக்காக ஆடிய க்ருனால் 23 ரன்களில் ஆட்டமிழந்தார், அதே நேரத்தில் கேப்டன் கே.எல் ராகுல் அரை சதம் அடித்தார். முன்னதாக ஆட்டத்தில், க்ருனால் நான்கு ஓவர்களில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மிளிர்ந்தார். அவர் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில்லை இரண்டு பந்தில் டக் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.