ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மிகப்பெரிய கார் விரும்பி என்பது ஊரறிந்தது. லம்போர்கினி ஹுராகன் சூப்பர் கார் மற்றும் ஆடி ஆர்எஸ்5 போன்ற சில சூப்பர் கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக மெர்சிடஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார் என்னும் செய்து வைரலாகி வருகிறது.


கொல்கத்தா அணி


நடந்து முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தலைமை தாங்கி வழிநடத்தினார் ஷ்ரேயாஸ் ஐயர். அவர் தலைமையில் அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி, 8 இல் தோற்று, 6 போட்டிகளில் மட்டுமே வென்றது. ரஸல், சுனில் நரேன், பேட் கம்மின்ஸ் போன்ற ஸ்டார் வீரர்கள் அணியில் இருந்தும் படு சொதப்பு சோதப்பியதை அடுத்து அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை கொஞ்சம் சீக்கிரமாகவே இழந்தது.



12.5 கோடிக்கு ஏலம்


ஆனாலும் இந்த தொடருக்காக நடந்த மெகா ஏலத்தில் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 12.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருந்தார். அத்தனை கோடிக்கு எடுக்கப்பட்டு, ஒரு போட்டியில் கூட சிறப்பாக செயல்படாமல் போனார். டெல்லி கேபிடல்ஸை இரண்டு முறை பிளேஆஃப்களுக்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்த ஆண்டு கேகேஆர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.  ஐபிஎல் 2022-ல் 134.56 ஸ்ட்ரைக் ரேட்டில் 30.85 ஆவரேஜுடன் மொத்தமாக 401 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது சோதப்பலே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அணி வீரர்கள் நன்றாக விளையாடினாலும் இல்லை என்றாலும் அவர்களுக்காக நிர்ணயம் செய்யப்பட்ட ஏலத்தொகையில் மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை.


2.5 கோடிக்கு கார்


தற்போது புதிய காரை வாங்கியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காரை இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் வாங்கி உள்ளார். விலையுயர்ந்த ரக காராக மெர்ஸிடஸ் பென்சில் வெளி வந்துள்ள இந்த காரில் பல புதுமையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.






இன்ஸ்டாகிராம் பதிவு


ஐபிஎல்-இல் சபாதித்த பணத்தை கொண்டு கார் வாங்கோயுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். இந்த காரை ஷ்ரேயாஸ் ஐயர் மும்பையின் லேண்ட்மார்க் கார்ஸ் என்னும் இடத்தில் தான் வாங்கி உள்ளார். அவர்கள் அதற்கான வாழ்த்தையும் இணையத்தில் தெரிவித்து உள்ளனர். “புத்தம் புதிய Mercedes-Benz G 63 என்ற காரை வீட்டிற்கு ஒட்டி செல்வதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் திரு. ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாழ்த்துக்கள். ஈடு இணை இல்லாத ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு திறன்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு கொண்ட கார்! பென்ஸ் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம், உங்கள் கவர் டிரைவ்களைப் போலவே ரசிக்கும்படி இந்த காரையும் ட்ரைவ் செய்வீகர்கள் என்று நம்புகிறோம்" என்று லேண்ட்மார்க் கார்ஸ் மும்பை தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.