ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்கான தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய குஜராத் அணி கோப்பையை வென்று அசத்தியது. 


இந்நிலையில் 2022  ஐபிஎல் தொடரின் போது அதிகமான வைரலான ட்வீட் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆங்கில தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. 


2022 ஐபிஎல் தொடரின் வைரலான ட்வீட்:


நடப்பு ஐபிஎல் தொடரின் போது மிகவும் வைரலான ட்வீட் விராட் கோலியின் ட்வீட் என்பது தெரியவந்துள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. அப்போது ஆர்சிபி அணியின் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா என்று பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டை சுமார் 27.8 ஆயிரம் பேருக்கு மேல் ரீட்வீட் செய்திருந்தனர். இந்த ஐபிஎல் தொடரின் மிகவும் அதிகமாக வைரலான ட்வீட்டாக இது அமைந்துள்ளது. 






2022 ஐபிஎல் போது ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட வீரர் யார்?


அதேபோல் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ட்விட்டரில் பல்வேறு வீரர்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட நபராக விராட் கோலி உள்ளார். விராட் கோலியின் ஃபார்ம் குறித்து நடப்பு ஐபிஎல் தொடரின் போது ரசிகர்கள் அதிகமாக ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளனர். 


2022 ஐபிஎல் போது அதிகமாக பேசப்பட்ட அணி எது?


2022ஆம் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் முதல் முறையாக களமிறங்கின. எனினும் வழக்கம் போல் ட்விட்டரில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட அணிகள் பட்டியலில் இவை இடம்பெறவில்லை. ட்விட்டரில் அதிகமாக பேசப்பட்ட அணியாக ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. அதன்பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண