SRH IPL 2024: ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.


ஐபிஎல் ஃபைனலில் ஐதராபாத்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 175 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, வெறும் 139 ரன்களை மட்டுமே தோல்வியடைந்தது. இதனால், 6 வருடங்களுக்குப் பிறகு ஐதராபாத் அண் மீண்டும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனை அந்த அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், ஐதராபாத் அணி வெற்றி பெறும்போது, மைதானத்தில் இருந்து அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் கொடுத்த ரியாக்‌ஷன் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


காவ்யா மாறன் வைரல் வீடியோ:


ஐதராபாத் அணி வெற்றி பெற்றதுமே, காவ்யா மாறன் கைகளை தட்டியவாறு துள்ளிகுதித்துள்ளார். அருகிலிருந்த நண்பர்களிடமும் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், மேல் இருக்கையில் அமர்ந்து இருந்த தனது தந்தையையும் கண்டதும், முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க ஓடிச்சென்று கட்டி அணைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.


 






வைரலாகும் மீம்ஸ்கள்:


இதனிடையே, நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது, பேட் கம்மின்ஸை 20 கோடியே 50 லட்சத்திற்கு காவ்யா மாறன் ஏலத்தில் எடுத்தார். அப்போது, கம்மின்ஸை இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்தது சரியான முடிவல்ல என பலரும் விமர்சித்தனர். ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி, முதல் தொடரிலேயே ஐதராபாத் அணியை கம்மின்ஸ் இறுதிப்போட்டிக்கு வழிநடத்தியுள்ளார். இதன் காரணமாக காவ்யா மாறன் மற்றும் கம்மின்ஸை பாராட்டும் வகையிலும், பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.