ஐ.பி.எல். திருவிழா கொண்டாட்டம் ஒருபுறம் கோலாகலமாக நடைபெற்று வந்தாலும், யார் சிறந்த அணி என்று ரசிகர்களுக்கு இடையேயான போட்டியும் தொடர்ந்து வருகிறது. அதுவும், எப்போதுமே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணிகளான சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளின் போட்டிகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாள் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியதுமில்லை. இந்த ஐ.பி.எல். தொடரில் நடந்த ஐந்து போட்டிகளில் மூன்றில் மட்டுமே சென்னை சூப்பர் அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் மூன்று போட்டிகளிலும் போராடி வெல்ல வேண்டிய நிலைதான் இருந்தது என்று சொல்லலாம்.


நடந்து முடிந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் 8 ரன் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றிபெற்றது. 226 ரன்கள் இலக்கு என்ற நல்ல ஸ்கோர் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்கள் சரியாக இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.  6 எக்ஸ்ட்ராஸ் வழங்கியது பெரும் பேசுபொருளாகியுள்ளது. சென்னை அணியின் பவுலிங் போதுமான அளவிற்கு வலிமையுடன் இல்லை என்பதுதான் உண்மை. முக்கியமான பவுலர்கலான தீபக் சஹார், முகேஷ் செளத்ரி, மங்களா, எப்ன் ஸ்டோக்ஸ், சிமர்ஜித் சிங் உள்ளிட்டவர்கள் காயன் ஏற்பட்டது ஒரு காரணமாக ஒரு புறம் இருந்தாலும், அணியின் பவுலிங் பலம் வாய்ந்ததாக இல்லாதது வெற்றியை நிர்ணயிப்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அணியின் கேப்டன் தோனி ஏற்கனவே தெரிவித்திருந்தார். 


அணிக்கு தோனி அறிவுரை


சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அணியின் பந்துவீச்சு செயல்திறனில் தோனி முழுமையாக மகிழ்ச்சியடையாததை வெளிப்படுத்தினார். அதோடு தோனி சென்னை பந்துவீச்சாளர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தார். எல்.எஸ்.ஜி. க்கு எதிரான சிஎஸ்கேயின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு தனது நேர்மையான ஒப்புதலைப் பகிர்ந்து கொண்ட தோனி, சேப்பாக்கத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும், தனது பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசவில்லை என்பதை தெரிவித்தார். 


"நோ-பால் வீசவே கூடாது, மற்றும் வைடுகள் குறைவாக வீச வேண்டும். நாம் அதிக எக்ஸ்ட்ராஸ் வழங்குகிறோம். அவற்றைக் குறைக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் வேறு புதிய கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டும்," என்று போஸ்ட் மேட்ச் பிரண்ட்டேசனில் தெரிவித்திருந்தார். முந்தைய போட்டியில் சி.எஸ்.கே. 13 வைட்கள் வழங்கியருந்தது. பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் 6 எக்ஸ்ட்ராஸ் வழங்கியது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 


இது குறித்து அவர் கூறுக்கையில்,” அதிக எக்ஸ்ட்ராஸ் வங்குவதால் அணியின் வெற்றி பாதிக்கப்படுவதோடு, தோனி போட்டியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை அணி வீரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தோனி இது குறித்து ஏற்கனவே அணியிருக்கு அறிவுறுத்தியுள்ளார். அணி வீரர்கள் எக்ஸ்ட்ராஸ் வழங்குவதை குறைக்கவில்லை என்றால், ஒருநாள் கேப்டன் தோனி இல்லாமல் களமிறங்கும் காலம் ஏற்படாலாம். ‘slow overrate’ விதிமுறைகள் மீறப்பட்டதாக தோனிக்கு அபராதம் விதிக்கப்படும். ” என்று சென்னை அணி வீரர்களுக்கு சேவாக் முக்கியமான அறிவுரையை வழங்கியிருக்கிறார். அதோடு, இந்த தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அணி சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால் நிச்சயம் அணியின் பவுலிங் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியம்.