IPL2023 LSG vs GT Playing XI:  வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ல்கனோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  குஜராத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு தான் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் அறிமுகமாகின. இதனால் இதுவரை இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த இரண்டிலுமே நடப்புச் சாம்பியன்  குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. லக்னோ மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதுவது இதுவே முதல்முறையாகும்.  உள்ளூர் மைதானத்தில் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள லக்னோ அணி, அதில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளதால் குஜராத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேற திட்டமிட்டுள்ளது. 


நடப்பு தொடரில் இதுவவரை:


நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் அணியோ  5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. குறிப்பிடத்தக்கது. 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: 


கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள் 


ஜெய்தேவ் உனட்கட், கிருஷ்ணப்பா கௌதம், டேனியல் சாம்ஸ், பிரேரக் மங்காட், கரண் ஷர்மா 


குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்


விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா


குஜராத் டைட்டன்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள் 


ஜோசுவா லிட்டில், ஜெயந்த் யாதவ், சிவம் மாவி, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்ரீகர் பாரத்