சுவாரஸ்யமான பட்டியலாக வெளியாகி இருக்கிறது ஐபிஎல் 2022 தொடருக்காக தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரம். இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது. 


அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது.






அந்த வரிசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு பேர் தக்க வைக்கப்பட்டனர். இதில் எதிர்ப்பார்த்த நான்கு வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், எதிர்ப்பார்க்காத வகையில் தோனியைவிட அதிக விலை கொடுத்து தக்க வைக்கப்பட்டிருக்கிறார் ஜடேஜா. சென்னை அணியில் எப்பொழுதும் நீங்கா இடம் பிடிக்கும் தோனியை பின்னுக்குத்தள்ளி ஜடேஜா 16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த ஐபிஎல் ரிடென்ஷனில் அதிக ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்ட வீரராக ஜடேஜா முன்னிலை பெற்றிருக்கிறார்.


இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில், தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயின் அலி என தக்கவைக்கப்பட்ட வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். ”ஜடேஜா, மொயின் யெல்லோ அகெயின்” எனவும், “நான் ருது, உங்கள் சொத்து” எனவும் பேசி இருக்கின்றனர் வீரர்கள். மேலும், ‘மகேந்திர சிங் தோனி’ என எழுதப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் தோனி கையெழுத்திடுவது போன்ற இந்த வீடியோ சிஎஸ்கே ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இந்த வீடியோவுக்கு வெவ்வேறு பாடல்களை ஓடவிட்டு வீடியோவும் வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.


வீடியோவை காண:






இது தோனி ஸ்பெஷல்:






மேலும் படிக்க: IPL RETENTION 2022: சிலர் காலி... பலர் ஜாலி... ஐபிஎல் 2022 மாநாட்டின் ‛ரிபீட்டு’ ஹீரோஸ் இவங்க தான்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண