ஐபிஎல் 2022 தொடருக்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்ததை அடுத்து ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் நடைபெறலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஐபிஎல் 2022 தொடருக்கான ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்சராக விவோ ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட விவோ, இந்தியா - சீனா இடையேயான கல்வான் பல்லத்தாக்கு விவகாரம் காரணமாக 2020 ஐபிஎல் தொடரின்போது விலக்கி வைக்கப்பட்டது. அப்போது ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்சராக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஸ்பான்சராக டாடா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதி செய்திருக்கிறார்.



உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு


கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பான முறையில் ஐபிஎல் ஏலம் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், 2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி வரும் பிப்ரவரி மாதம் 11 முதல் 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது. 


இந்தியாவின் முதன்மையான முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி 2021-22 ம் ஆண்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், 2021-22 சீசனுக்கான கர்னல் சி கே நாயுடு டிராபி மற்றும் சீனியர் மகளிர் டி20 லீக் ஆகிய தொடர்களுக்கு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 


இந்த ஆண்டு, ரஞ்சி டிராபி 201-22 சீசன் ஜனவரி 13 ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், ஐபிஎல் 2022 துபாய்க்கு மாற்றப்படலாம் அல்லது இந்தியாவில் நடத்துவதாக இருந்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 4 கிரிக்கெட் மைதானங்களில் அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்கும் திட்டத்தில் பிசிசிஐ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண