ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் முதல் நாளில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட டூபிளசிஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. டூபிளசிஸை சென்னை அணி தவறவிட்டது தொடர்பாக சென்னை ரசிகர்கள் பலரும் மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர். 


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் டூபிளசிஸ் தொடர்பாக ஒரு பதிவு செய்திருந்தார். அதற்கு டூபிளசிஸ் பதில் பதிவையும் செய்திருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அவர்கள் இருவரும் இருக்கும் படத்தை பதிவிட்டு , "டேக் கேர் பார்ட்னர்"எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு டூபிளசிஸ், "உங்களை விரைவில் பார்க்கலாம் பார்ட்னர்" எனப் பதிவிட்டிருந்தார். இந்த இரண்டு பழைய பதிவுகளும் தற்போது  சென்னை ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. 


 






இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பிரியும் டூபிளசிஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வீடியோ ஒன்று பதிவிட்டப்பட்டுள்ளது. அதில்,"சென்னை அணியின் ரசிகர்கள், வீரர்கள், அணி நிர்வாகத்தினர் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. அங்கு இருந்த 10 ஆண்டுகளும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒரு கதவு மூடினால் மற்றோரு கதவு புதிய வாய்ப்புடன் திறக்கும். அப்படி இருக்கும் புதிய வாய்ப்பை நோக்கி பயணம் செய்ய உள்ளேன். சென்னை அணிக்கு என் சார்பிலும் என்னுடைய குடும்பத்தின் சார்பிலும் நன்றி" எனக் கூறியுள்ளார். 


 


ஐபிஎல் தொடரில் டூபிளசிஸ் 2012ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அப்போது முதல் 2015ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விளையாடினார். அதில் 2012ஆம் ஆண்டு 13 போட்டிகளில் 398 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு இவர் 303 ரன்களும், 2015ஆம் ஆண்டு 380 ரன்களும் அடித்தார். இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இவர் புனே அணிக்காக விளையாடினார். 


 






சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் திரும்பியது. அப்போது மீண்டும் சிஎஸ்கே அணியில் டூபிளசிஸ் விளையாடினார். அதில் குவாலிஃபையர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளசிஸ் 42 பந்துகளில் 67* ரன்கள் அடித்து சென்னை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2021ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் தொடரை வெல்ல ருதுராஜ் கெய்க்வாட் உடன் இவரும் ஒரு முக்கிய காரணமாக தொடக்க ஆட்டக்காரராக சென்னை அணிக்கு வாட்சன், ராயுடு மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் உடன் களமிறங்கி டூபிளசிஸ் முக்கிய பலமாக அமைந்தது. 


Also Read | IPL Auction 2022 Day 2 LIVE: ஐபிஎல் வீரர்கள் ஏலம்- நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே எடுத்த சிஎஸ்கே !