ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் ஏலம் நடைபெற்றது. அதில் 161 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அவர் தவிர மற்ற சில வீரர்களும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஏலம் இன்று தொடங்கியது. 


இதில் முதலில் சர்வதேச பேட்ஸ்மேன்கள் செட் எடுக்கப்பட்டது. அதில் இந்திய வீரர் ரஹானேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. மற்றொரு இந்திய வீரர் புஜாராவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதன்பின்னர் பல வீரர்கள் ஏலத்தில் வந்தனர். அந்தவகையில் இலங்கையை சேர்ந்த இளம் சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் திக்‌ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 70 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 


இந்நிலையில் யார் இந்த மஹீஷ் திக்‌ஷனா? 


இலங்கையின் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான மஹீஷ் திக்‌ஷனா. இவர் அங்கு 2018ஆம் ஆண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார். இதன்காரணமாக 2021ஆம் ஆண்டு இலங்கை தேசிய அணியில் இவர் இடம்பிடித்தார். இலங்கை அணிக்காக தற்போது வரை 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஒருநாளில் 6 விக்கெட்டும், டி20 போட்டியில் 9 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 


 






இவருடை சிறப்பு அம்சன் என்னவென்றால் இவர் கேரம் பால், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், கூக்ளி உள்ளிட்ட அனைத்து வகை பந்துகளையும் வீசும் திறமை கொண்டவர். இதனால் இவரை கணிக்க பேட்ஸ்மேன்களுக்கு சற்று சிரமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை வைத்து அவர் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. 


Also Read |IPL Auction 2022 Day 2 LIVE: ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் - சிவம் துபேவை எடுத்த சிஎஸ்கே !


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண