IPL Media Rights LIVE Updates : ஐ.பி.எல். ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஹாட்ஸ்டார்..! வியாகாம்..!
IPL Media Rights 2023-27 LIVE Updates: 2023 முதல் 2028ம் ஆண்டு வரை ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றப்போவது யார்? என்பதற்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி அருகே பாப்பராப்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சியில் தேர் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு. தேருக்கடியில் சிக்கி படுகாயம் அடைந்த மனோகரன், சரவணம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. காயமடைந்த மேலும், மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐ.பி.எல். போட்டிக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ஓடிடி தள உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் வியாகாம் நிறுவனங்கள் கைப்பற்றி அசத்தியுள்ளன.
ஏலம் இன்று முடிவடைய இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில், டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் அடங்கிய பண்டில் ஏ மற்றும் பிக்கான ஏலம் ஜூன் 13 (நாளை) வரை நடைபெறும். 18 போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமைகள் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உள்ளிட்ட மீதமுள்ள இரண்டு தொகுப்புகளுக்கான ஏலம் நாளை மதியம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற சோனி நிறுவனம், ரிலையன்ஸ்- வியாகாம் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற ரிலையன்ஸ் மற்றும் வியாகாம் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தொலைக்காட்சி உரிமத்திற்கான அடிப்படை உரிமை ஒரு போட்டிக்கு ரூபாய் 49 கோடி என்று 74 ஆட்டங்களுக்கும், டிஜிட்டல் உரிமத்தின் அடிப்படை விலை ரூபாய் 33 கோடி என்றும் தொடங்கியுள்ளது,
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனமும், 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு முதல் ஸ்டார் இந்தியாவும் கைப்பற்றியிருந்நது.
ஐ.பி.எல். ஒளிபரப்பு ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் மற்ற போட்டிகளுக்கு கடும் போட்டி அளித்து வருகிறது.
ஐ.பி.எல். ஒளிபரப்ப உரிமம் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், வியாகாம், சோனி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Background
IPL Media Rights 2023-27 LIVE Updates:
2023ம் ஆண்டு முதல் 2028ம் ஆண்டு வரையிலான ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏல உரிமையை கைப்பற்றப்போவது யார்? என்பதற்கான ஏலம் ஆன்லைன் மூலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்
கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலககோப்பையை போல பிரம்மாண்ட திருவிழாவாக ஐ.பி.எல். தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில், ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் ஜூன் 12-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, இன்று ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்திற்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இந்த முறை ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில் கடும் போட்டிகள் நிலவுகிறது. இந்த ஏலத்தில் டிஸ்னி – ஹாட்ஸ்டார், சோனி, ஸ்போர்ட்ஸ் 18, ஜீ என்டெர்டெயிண்மெண்ட், ஆப்பிள், கூகுள், ஸ்கை ஸ்போர்ட்ஸ் யுகே மற்றும் தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
அமேசான் பிரைமும் இந்த ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், கடும் போட்டி காரணமாக அவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த ஏலத்தில் பங்கேற்க ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மதிப்பின்படி 25 லட்சம் ரூபாய் நுழைவுக்கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை திருப்பி அளிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலம் மொத்தம் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதன்படி, இந்திய துணை கண்டத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு தனியாக ஒரு ஏலமும், டிஜிட்டல் உரிமத்திற்கு ஒரு ஏலமும், 18 போட்டிகளின் தொகுப்பிற்கான பிரத்யேகமற்ற டிஜிட்டல் உரிமைகள் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கான உரிமைகளுக்கு ஏலம் நடைபெற உள்ளது.
இந்த ஏலத்தில் உரிமம் பெறும் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 16, 347.50 கோடிக்கு உரிமத்தை கைப்பற்றியது. இந்த முறை ஏல உரிமை ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனையாகும் என்று பிசிசிஐ எதிர்பார்த்து காத்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -