ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இதன்படி, முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடுகின்றன. 


டாஸ் வென்றார் படிதார்:


இந்த போட்டியில் கேப்டனாக முதன்முறையாக களமிறங்கிய ரஜத்படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சொந்த மண்ணில்  ஆடும் கொல்கத்தா அணி வெற்றியுடன் களமிறங்க முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், புது பட்டாளத்துடன் களமிறங்கும் ஆர்சிபி அணி வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 


மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகளவு இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், வானம் தெளிவாகவே காணப்பட்டது. இதனால், போட்டி தொடங்குவதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. 


ப்ளேயிங் வெலன்:


கொல்கத்தா அணியில் ரஹானே தலைமையில் டிகாக், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரகுவன்ஷி, சுனில் நரைன், ராமன்தீப்சிங், ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி களமிறங்குகி்னறனர். 

 

ரஜத் படிதார் தலைமையில் களமிறங்கியுள்ள பெங்களூர் அணி விராட் கோலி, பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ரஷிக்தர்சலாம், சுயாஷ் சர்மா, ஹேசில்வுட், யஷ் தயாள் களமிறங்கியுள்ளனர். 

 

இந்த மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்று கருதப்படுவதால் சுயாஷ் சர்மா, ரஷீக்சலாம், குருணல் பாண்ட்யா,  லிவிங்ஸ்டன் இருப்பதால் புவனேஷ்வர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

ஆட்டத்தின் முதல் பந்தையே டி காக் பவுண்டரி அடித்த நிலையில் அடுத்த பந்தில் கொடுத்த எளிதான கேட்ச்சை ரஷீக்தார் கோட்டைவிட்டார். ஆனால், ஆட்டத்தின் 4வது பந்திலே டி காக் 4 ரன்னில் அவுட்டானார். 


கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் டி காக் அவுட்டான நிலையில், கேப்டன் ரஹானே - சுனில் நரைன் ஜோடி ஆடி வருகிறது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், இளம் வீரர் ரகுவன்ஷி, அனுபவ வீரர் ரஸெல் பேட்டிங் பலமாக உள்ளனர். மேலும் ஆல்ரவுண்டர் ராமன்தீப்சிங் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சுழற்பந்துவீச்சை பிரதானமாக நம்பி இறங்கியுள்ள பெங்களூர் அணி புவனேஷ்வர் குமாருடன், நுவன் துஷாராவையும் பெஞ்சில் உட்கார வைத்துள்ளனர். முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் முழு முனைப்புடன் ஆடி வருகின்றனர். மேலும், மழை ஏதேனும் பெய்தால் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படும் என்பதால் அதற்கேற்ப இரு அணிகளும் தங்களது வியூகத்தை வகுத்துள்ளனர்.