ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், முதன்முறை சாம்பியனாக துடிக்கும் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
ஆர்சிபி முன் உள்ள சவால் என்ன?
இன்று நடக்கும் முதல் போட்டியில் ஆர்சிபி அணி பலமிகுந்த கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு இன்று நடக்கும் போட்டியில் மிகப்பெரிய சவாலாக இருப்பது ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வதே ஆகும்.
ஆர்சிபி அணியில் ஆடப்போகும் 4 வெளிநாட்டு வீரர்கள் யார்? என்பதைத் தேர்வு செய்வதிலே சவால் உள்ளது. இந்த அணியில் லிவிங்ஸ்டன், பில் சால்ட், டிம் டேவிட், லுங்கி நிகிடி, ரொமாரியோ ஷெப்பர்ட், நுவன் துஷாரா, ஜேக்கப் பெத்தேல், ஹேசில்வுட் ஆகிய 9 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால், ஒரு அணி அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே களமிறக்க வேண்டும்.
பெரும் சவால்?
பில் சால்ட் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதால் அவர் ஆடுவது உறுதியாகும். அதேபோல, பின்வரிசையில் லிவிங்ஸ்டன் களமிறங்குவார் என்பதாலும் அவர் பந்துவீசுவார் என்பதாலும் அவர் ஆடுவதும் உறுதியாகும். பந்துவீச்சில் ஹேசில்வுட் முக்கிய வீரர் என்பதால் அவர் களமிறங்குவது உறுதியாகும். 4வது வெளிநாட்டு வீரராக இவர்கள் யாரை களமிறக்க போகிறார்கள்? என்பதே இப்போது பெரும் சவாலாக உள்ளது.
ஆல்ரவுண்டர் ரொமாோரியோ ஷெப்பர்ட்டை களமிறக்கினால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்குமே ஆர்சிபிக்கு பலமாக இருக்கும். அதேசமயம், ஆர்சிபி-க்கு பலவீனமாக இருப்பது பந்துவீச்சே ஆகும். இதனால், இலங்கையைச் சேர்ந்த நுவன் துஷாராவை களமிறக்கினால் ஆர்சிபிக்கு பந்துவீச்சு பலமாக இருக்கும்.
யாருக்கு வாய்ப்பு?
விராட் கோலி, ரஜத் படிதார், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, சுவப்னில் சிங், குருணல் பாண்ட்யா இருப்பதால் டிம் டேவிட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் இருவருக்கும் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினமாகும். மேலும், அதிரடி பேட்ஸ்மேன்களான மனோஜ், சுவஸ்திக் சிகாராவிற்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிட்டுமா? என்பதும் கேள்விக்குறியாகும்.
ஆல்ரவுண்டர்களாக குருணல் பாண்ட்யா, சுவப்னில் சிங், லிவிங்ஸ்டன், ரொமோரியோ ஷெப்பர்ட்டே பங்குவகிப்பார்கள் என்று கருதப்படுகிறது. விராட் கோலி, ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஹேசில்வுட், ஆகிய 8 பேர் களமிறங்குவது உறுதியாகும். எஞ்சிய 3 இடங்களில் யார்? யார்? இறங்குவது என்பது எதிரணியைப் பொறுத்தும், ஆடுகளம் பொறுத்துமே மாறும் என்பது முடிவு செய்யப்படும்.
இந்த ப்ளேயிங் 11-ஐ ஆர்சிபி அணி மிகச்சரியாக தேர்வு செய்துவிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சுழற்பந்துவீச்சில் மிரட்டும் சுயாஷ் சர்மாவிற்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிட்டுமா? என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.