ஐ.பி.எல். 2023 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வரும் வாரம் முதல் புள்ளிப்பட்டியளில் 'Q' என்ற குறியீடுகளோடு அணிகள் பிளே ஆஃப்-ற்கு தகுதி பெறத் துவங்கும். சில அணிகள் தங்கள் வாய்ப்பை முழுமையாக இழக்கும். இப்போது வரை எல்லா அணிகளுமே தகுதி பெரும் வாய்ப்புடன் இருப்பதால் களம் அனல் பறக்கக் காதிருக்கிறது.
முதல் 48 போட்டிகளுக்குப் பிறகு, 1 அணி 12 புள்ளிகளிலும், 2 அணிகள் 11 புள்ளிகளிலும், 4 அணிகள் 10 புள்ளிகளிலும், 1 அணி 8 புள்ளிகளிலும், 2 அணிகள் 6 புள்ளிகளிலும் உள்ளன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று தனித்து நிற்கும் அணியாக உள்ளது. இந்த நிலையில் அனைத்து 10 அணிகளுக்கும் தனித்தனியாக சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?
ஒவ்வொரு அணியிலும் ஹீரோவாக விளங்கிக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள்தான் இந்த தொடர் முடியும் வரை அந்த ஃபார்மை தக்கவைத்து அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்து செல்லும் வீரர்களாக இருக்கப்போகிறார்கள். ஃபேன்டஸி விளையாடுபவர்கள் கவனிக்க வேண்டிய இடம் இது.
மும்பை இந்தியன்ஸ் (5 முறை கோப்பை வென்றவர்கள், 2013, 2015, 2017, 2019, 2020)
அதிக ரன்கள்:
- இஷான் கிஷான் - 286 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- திலக் வர்மா - 274 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- சூர்யகுமார் யாதவ் - 267 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- பியூஷ் சாவ்லா - 15 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
- ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 8 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
- ரைலி மெரிடித் - 7 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: திலக் வர்மா - 46 பந்துகளில் 84 ரன்கள் vs RCB
சிறந்த பந்துவீச்சு: பியூஷ் சாவ்லா - 3/22 vs DC
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: சூர்யகுமார் யாதவ்- 184.14 (9 இன்னிங்ஸில் 267 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: பியூஷ் சாவ்லா - 7.29 (9 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்)
அணியின் ஹீரோ: பியூஷ் சாவ்லா
சென்னை சூப்பர் கிங்ஸ் (4 முறை கோப்பை வென்றவர்கள், 2010, 2011, 2018, 2021)
அதிக ரன்கள்:
- டெவோன் கான்வே - 414 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- ருதுராஜ் கெய்க்வாட் - 354 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- சிவம் துபே - 264 ரன்கள் (8 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- துஷார் தேஷ்பாண்டே - 17 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
- ரவீந்திர ஜடேஜா - 14 விக்கெட்கள் (10 போட்டிகள்)
- மொயீன் அலி - 9 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: ருதுராஜ் கெய்க்வாட் - 50 பந்துகளில் 92 ரன்கள் vs GT
சிறந்த பந்துவீச்சு: மொயீன் அலி - 4/26 vs LSG
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: எம்எஸ் தோனி - 211.43 (6 இன்னிங்ஸில் 74 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: மிட்செல் சான்ட்னர் - 6.75 (3 போட்டிகளில் 3 விக்கெட்)
அணியின் ஹீரோ: எம்எஸ் தோனி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2 முறை கோப்பை வென்றவர்கள், 2012 & 2014):
அதிக ரன்கள்:
- ரிங்கு சிங் - 316 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
- வெங்கடேஷ் ஐயர் - 303 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
- நிதிஷ் ராணா - 275 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- வருண் சக்கரவர்த்தி - 14 விக்கெட்கள் (10 போட்டிகள்)
- சுயாஷ் சர்மா - 9 விக்கெட்கள் (7 போட்டிகள்)
- சுனில் நரைன் - 7 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: வெங்கடேஷ் ஐயர் - 51 பந்துகளில் 104 ரன்கள் vs MI
சிறந்த பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி - 4/15 vs RCB
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: ஷர்துல் தாக்கூர் - 178.69 (7 இன்னிங்ஸில் 109 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: அனுகுல் ராய் - 6.43 (3 போட்டிகளில் 3 விக்கெட்)
அணியின் ஹீரோ: ரிங்கு சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் (1 முறை கோப்பை வென்றவர்கள், 2008)
அதிக ரன்கள்:
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 442 (10 இன்னிங்ஸ்)
- ஜோஸ் பட்லர் - 297 (10 இன்னிங்ஸ்)
- சஞ்சு சாம்சன் - 242 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- ஆர். அஸ்வின் - 13 விக்கெட்கள் (10 போட்டிகள்)
- யுஸ்வேந்திர சாஹல் - 13 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
- டிரென்ட் போல்ட் - 10 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 62 பந்துகளில் 124 ரன்கள் vs MI
சிறந்த பந்துவீச்சு: யுஸ்வேந்திர சாஹல் - 4/17 vs SRH
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: துருவ் ஜூரல் - 191.30 (8 இன்னிங்ஸில் 132 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: (குறைந்தபட்சம் 3 விக்கெட்): ஆர். அஷ்வின் - 7.22 (9 போட்டிகளில் 13 விக்கெட்)
அணியின் ஹீரோ: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (1 முறை கோப்பை வென்றவர்கள், 2016)
அதிக ரன்கள்:
- ராகுல் திரிபாதி - 190 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- ஹென்ரிச் கிளாசென் - 189 ரன்கள் (6 இன்னிங்ஸ்)
- மயங்க் அகர்வால் - 187 (9 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- மயங்க் மார்கண்டே - 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)
- புவனேஷ்வர் குமார் - 8 விக்கெட்கள் (9 போட்டிகள்)
- டி நடராஜன் - 8 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: ஹாரி புரூக் - 55 பந்துகளுக்கு 100 ரன்கள் vs KKR
சிறந்த பந்துவீச்சு: மயங்க் மார்கண்டே - 4/15 vs PBKS
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: ஹைன்ரிச் கிளாசென் - 181.73 (6 இன்னிங்ஸில் 189 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: மயங்க் மார்கண்டே - 6.54 (7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்)
அணியின் ஹீரோ: மயங்க் மார்கண்டே
குஜராத் டைட்டன்ஸ் (1 முறை கோப்பை வென்றவர்கள், 2022)
அதிக ரன்கள்:
- சுப்மன் கில் - 375 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
- ஹர்திக் பாண்டியா - 252 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- விஜய் சங்கர் - 205 ரன்கள் (8 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- முகமது ஷமி - 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
- ரஷித் கான் - 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
- நூர் அகமது- 10 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: ஷுப்மன் கில் - 49 பந்துகளில் 67 ரன்கள் vs PBKS
சிறந்த பந்துவீச்சு: முகமது ஷமி - 4/11 vs DC
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: ராகுல் தெவாட்டியா - 203.23 (6 இன்னிங்ஸில் 63 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: முகமது ஷமி - 7.03 (10 போட்டிகளில் 18 விக்கெட்)
அணியின் ஹீரோ: முகமது ஷமி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
அதிக ரன்கள்:
- ஃபாஃப் டு பிளெசிஸ் - 466 ரன்கள் (9 போட்டிகள்)
- விராட் கோலி - 364 (9 போட்டிகள்)
- கிளென் மேக்ஸ்வெல் - 262 ரன்கள் (9 போட்டிகள்)
அதிக விக்கெட்டுகள்:
- முகமது சிராஜ் - 15 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
- ஹர்ஷல் படேல் - 11 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
- வனிந்து ஹசரங்கா - 7 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: ஃபாஃப் டு பிளெசிஸ் - 56 பந்துகளில் 84 ரன்கள் vs PBKS
சிறந்த பந்துவீச்சு: முகமது சிராஜ் - 4/21 vs PBKS
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: கிளென் மேக்ஸ்வெல் - 183.22 (9 இன்னிங்ஸில் 262 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: டேவிட் வில்லி - 7.00 (4 போட்டிகளில் 3 விக்கெட்டுகள்) (குறைந்தபட்சம் 4 போட்டிகள்)
அணியின் ஹீரோ: ஃபாஃப் டு பிளெசிஸ்
பஞ்சாப் கிங்ஸ்
அதிக ரன்கள்:
- ஷிகர் தவான் - 292 ரன்கள் (7 இன்னிங்ஸ்)
- ஜிதேஷ் சர்மா - 239 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
- பிரப்சிம்ரன் சிங் - 219 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- அர்ஷ்தீப் சிங் - 16 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
- நாதன் எல்லிஸ் - 9 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
- சாம் கர்ரன் - 7 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: ஷிகர் தவான் - 66 பந்துகளில் 99 ரன்கள் vs SRH
சிறந்த பந்துவீச்சு: அர்ஷ்தீப் சிங் - 4/29 vs MI
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: ஜிதேஷ் சர்மா - 165.97 (10 இன்னிங்ஸில் 239 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: ஹர்பிரீத் ப்ரார் - 7.56 (9 போட்டிகளில் 4 விக்கெட்)
அணியின் ஹீரோ: ஜிதேஷ் ஷர்மா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
அதிக ரன்கள்:
- கைல் மேயர்ஸ் - 311 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
- கேஎல் ராகுல் - 274 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- நிக்கோலஸ் பூரன் - 245 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- ரவி பிஷ்னோய் - 12 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
- மார்க் வுட் - 11 விக்கெட்டுகள் (4 போட்டிகள்)
- நவீன்-உல்-ஹக் - 7 விக்கெட்கள் (4 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: KL ராகுல் - 56 பந்துகளில் 74 ரன்கள் vs PBKS
சிறந்த பந்துவீச்சு: மார்க் வூட் - 5/14 எதிராக DC
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: நிக்கோலஸ் பூரன் - 164.43 (10 இன்னிங்ஸில் 245 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: நவீன்-உல்-ஹக் - 6.12 (5 போட்டிகளில் 7 விக்கெட்)
அணியின் ஹீரோ: கைல் மேயர்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்
அதிக ரன்கள்:
- டேவிட் வார்னர் - 308 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- அக்சர் படேல் - 238 ரன்கள் (9 இன்னிங்ஸ்)
- மணீஷ் பாண்டே - 133 (7 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்டுகள்:
- குல்தீப் யாதவ் - 8 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
- அக்சர் படேல் - 7 விக்கெட்கள் (9 போட்டிகள்)
- மிட்செல் மார்ஷ் - 7 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: டேவிட் வார்னர் - 55 பந்துகளில் 65 ரன்கள் vs RR
சிறந்த பந்துவீச்சு: மிட்செல் மார்ஷ் - 4/27 vs SRH
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்: பிலிப் சால்ட் - 160 (4 இன்னிங்ஸில் 64 ரன்கள்)
சிறந்த பந்துவீச்சு எகனாமி விகிதம்: இஷாந்த் சர்மா - 6.50 (4 போட்டிகளில் 6 விக்கெட்)
அணியின் ஹீரோ: அக்சர் படேல்