ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், களமிறங்க உள்ள பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஐபிஎல் சீசன்:
ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் இன்றைய 50 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைவதற்கு பெங்களூரு அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளும், பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பெங்களூரு அணி விவரம்:
டூப்ளெசிஸ், விராட் கோலி, அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹசரங்கா, கர்ன் சர்மா, சிராஜ், ஹேசல்வுட்
இம்பேக்ஸ் பிளேயர்ஸ்:
ஹர்ஷல் படேல், பிரபுதேசாய், பிரேஸ்வெல், விஜயகுமார், அகமது
டெல்லி அணி விவரம்:
வார்னர், சால்ட், மிட்செல் மார்ஷ், ரோஸோ, அமன் கான், மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
இம்பேக்ஸ் பிளேயர்ஸ்:
சகாரியா, அபிஷேக் போரல், ரிபல் படேல், லலித் யாதவ், பிரவின் துபே
பெங்களூரு அணி நிலவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை, பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் கிளென் மேக்ஸ்வேல் ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். அஞ்சு ராவத், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் வரும் போட்டிகளில் ரன் குவிக்க வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் இன்றைய போட்டி ஆர்சிபி பக்கம் திரும்பும்.
டெல்லி அணி நிலவரம்:

நேருக்கு நேர்:
இரு அணிகளுக்கிடையேயான நேருக்கு நேர் போட்டியில் ஆர்சிபியின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 28 போட்டிகள் நடைபெற்றன, இதில் பெங்களூரு 17 போட்டிகளிலும், டெல்லி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.