ஐ.பி.எல். தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் ப்ளே ஆப் வாய்ப்பு சுற்றை நிர்ணயிக்கும் என்பதால் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறவே முயற்சிக்கும். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 45வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.


கடந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றதால் உற்சாகத்துடன் களமிறங்கும். டெல்லி அணியைப் பொறுத்தவரையில் பிரித்விஷாவும், டேவிட் வார்னரும் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் அதிரடி தொடக்கத்தை அளித்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். மிட்ஷெல் மார்ஷ் அதிரடியை காட்டினால் டெல்லி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும், கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி டெல்லி அணிக்கு மிகவும் முக்கியம்.




ஆல்ரவுண்டர்களான லலித்யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்‌ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்த வேண்டியது அவசியம். டெல்லி அணிக்கு தற்போது பலமாக மாறியிருப்பது ரோவ்மென் பாவெல். தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் கடந்த சில போட்டிகளில் பாவெல் பார்முக்கு திரும்பியிருப்பது டெல்லிக்கு பலம். அவர் அதிரடி காட்டினால் டெல்லிக்கு ரன் எகிறும் என்பதில் சந்தேகம் இல்லை. சுழலில் குல்தீப்யாதவ் அசத்த உள்ளார்.


லக்னோ அணியும் டெல்லி அணிக்கு சமமான பலமான அணியாக உள்ளது. அந்த அணியின் பலமாக கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளார். அவர் தொடக்க வீரராக தொடர்ந்து அசத்தி வருகிறார். அவரது அசத்தல் பேட்டிங் இந்த போட்டிக்கும் . அவருடன் டி காக்கும் பேட்டிங்கில் அசத்தினால் லக்னோ அணிக்கு நல்ல ஸ்கோர் கிட்டும். மூன்றாவது வீரராக இறங்கும் தீபக் ஹூடா ரன்களை குவிக்க வேண்டியது அவசியம்.




ஆல்ரவுண்டர்கள் குருணல் பாண்ட்யா, ஜேசன் ஹோல்டர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்த வேண்டியது முக்கியம். பந்துவீச்சில் ஆவேஷ்கானும், சுழலில் ரவி பிஷ்னோயும் கலக்குவார்கள் என்று நம்பலாம். இளம் வீரர் ஆயுஷ்பதோனியிடம் இருந்தும் அதிரடியை எதிர்பார்க்கலாம். 9 போட்டிகளில் ஆடி 6 வெற்றி 3 தோல்வியுடன் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 போட்டிகளில் ஆடி 4 வெற்றி 4 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு இன்னும் பிரகாசம் ஆகும்.